தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முதல்நாள் (20.6.2017) யோகாபற்றி விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர் ‘நான் பூணூல் அணிந்த பிராமணன்’ என்று மார்தட்டி சட்டையையும் கழற்றிக் காட்ட முயற்சித்துள்ளார். இதன்மூலம் இந்த 2017 இலும் மற்றவர்களைச் ‘‘சூத்திரர்கள்’’ என்று அவமதிக்கும் அராஜகத்தைக் காண முடிகிறது.
அத்தோடு நிற்கவில்லை. கடவுள் மறுப்பாளர்கள் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று மிரட்டும் தொனியிலும் ஆவேசமாகப் பேசியுள்ளார். எதிர்த் தரப்பில் பங்கேற்ற தோழர் மதிமாறன், ‘‘நீங்கள் சொல்லும் விலை என் காதுகளில் கொலை என்று விழுகிறது’’ என்று கூறி, பா.ஜ.க. அராஜகக் கூச்சல்காரரின் முகமூடியைக் கிழித்தார்.
கொஞ்ச காலமாகவே தொலைக் காட்சிகளில் பங்கேற்கும் பா.ஜ.க.வினர் - அதிலும் பார்ப்பனர்களின் பேச்சுத் தொனி அத்துமீறித்தான் சென்று கொண் டிருக்கிறது. நேயர்களும் இதனைக் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
மத்தியில் ஆளும் அதிகாரம் அவர் கள் கையில் வந்துவிட்ட திமிர், தமிழ்நாட்டு ஆட்சியோ அவாளுக்கு அடகுபோன ஆட்சி என்ற தன்மையில் திமிராக நடந்துகொள்கிறார்கள்.
முன்பெல்லாம் ஆர்.எஸ்.எஸைப் பற்றிப் பேசினால், அவர்களைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்? அவர்கள் சார்பாக இங்கு யாரும் இல்லையே என்று குறுக் கிட்டவர்கள் - இப்பொழுது, ‘ஆம், நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் - அதில் பெருமை கொள்கிறோம்!’ என்று பூணூல் துடிதுடிக்க ஆவேசமாகப் பேச ஆரம் பித்துள்ளனர்.
சரக்கு இல்லாத வெறுமையான நிலையில், சத்தம் கொடுக்கிறார்கள் - அடுத்தவர்களைப் பேசவிடாமல் காட்டுக் கூச்சல் போடுவது என்பதெல்லாம் கடைந்தெடுத்த கோழைத்தனம்தானே!
பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பார்கள் அல்லவா - அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அக்கிர காரவாசிகள்.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று பேசும் தமிழ்த் தேசியவாதிகள் கொஞ்சம் அறிவோடு சிந்திக்கட்டும்.
காவல்துறையின் கவனத்துக்கு...
தோழர் மதிமாறன் மிரட்டப்பட்டுள் ளார்; அதிக விலை கொடுக்க நேரும் என்று எச்சரிக்கவும்பட்டுள்ளார். இதனை அலட்சியமாகக் கருதாமல் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தோழர் மதிமாறனுக்குப் போதிய பாது காப்பும் அளித்திடுவது காவல்துறையின் கடமையாகும்.