எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 24 குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் போட்டியிடுவோம்என்று எதிர்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அடுத்த மாதம் (ஜூலை) 17- ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரை காங்கிரஸ் உள் ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ளன.

தலித்சமூகத்தைச்சேர்ந்த இந்த இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடு கின்றனர். அவர்களில் ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மீரா குமார் பீகாரைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், தம்மை வேட்பாளராகத் தேர்வு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தத் தேர்தலானது சித்தாந்த ரீதியிலான மோதலாகும். இத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் நாட்டு நலனையும், சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் முடிவெடுக்குமாறு எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘மதச்சார்பற்றசக்திகளை பிரதிநிதிப்படுத்த மீராகுமார் சிறந்த வேட்பாளர் ஆவார். இது சித்தாந்தங்களுக்குஇடை யிலான இந்த மோதலில் பின்வாங்கும்பேச்சுக்கேஇட மில்லை.மதச்சார்பற்ற சித்தாந் தத்தைக் கொண்டவர்கள் மீரா குமாரை ஆதரிக்கவேண்டும்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவும், குடியரசுத் தலை வர் தேர்தலை சித்தாந்த ரீதியிலான மோதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்த நேரத்தில் எங்களுக்குப் போதிய எண்ணிக்கை பலம் இல்லை என்பது உண்மை. ஆனால், இது ஒரு போட்டி என்ற நிலையில் தீவிரமாகப் போராட வேண்டியுள்ளது.

இது ஓர் அடையாள ரீதி யிலான மோதல் என்று சிலர் கூறுகின்றனர்.

அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்கவே இந்தப் போட்டி. நாங்கள் மற்ற எதிர்க்கட்சிகளையும் அணுகி, மீரா குமாரை ஆதரிக்கக் கோரு வோம் என்றார் டி.ராஜா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner