எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பூமியைத் தோண்டும் முன் முக்கிய துறைகளுக்குக் கடிதம்மூலம் தகவல் தெரிவிக்கவேண்டும் - அமைச்சர் தங்கமணி.

* தமிழகத்தில் விரைவில் கூகுள் மய்யம் - அமைச்சர் எம்.மணிகண்டன்.

* இனி இந்தியிலும் கடவுச் சீட்டுகள் அச்சிடப்படும் - சுஷ்மா சுவராஜ். (தமிழில்...?).

* ஜி.எஸ்.டி.யைத் திணிக்கவில்லை - ஆனால், அனைவரும் ஏற்கவேண்டும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

* சென்னை - அண்ணாநகரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, தனது பெற்றோர் தனக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயல்வதாக காவல்துறை ஆணையரிடம் புகார்.

* இந்தியாவில் ஆறு கோடியே 90 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் - அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி.

* டில்லியில் திருமணத்திற்கு மறுத்த காதலனின் ஆணுறுப்பை துண்டித்தார் காதலி.

* அரக்கோணத்தில் விரைவில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் - அமைச்சர் சி.வி.சண்முகம்.

* ஜூலை 20 ஆம் தேதிவரை வங்கிகள், செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம்.

* ஆந்திர மாநிலம், கர்னூலில் திடீர் மின் தடை காரணமாக அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகள் சாவு.

* நேற்று முன்தினம்

(ஜூன் 23) திருப்பூர் மாவட்டம், அவரப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தாலியைக் கழற்றி வீசிப் போராட்டம் நடத்தினர்.

* ஆண்டு வருமானம் ரூ.இரண்டரை லட்சத்திற்கு மேல் இருந்தால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner