எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமூக நீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ரஜபுத்திரர்கள் குடும்பத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பாடுபட்டவர்.

டில்லியில் பார்ப்பன அதிகார மய்யமாக இருந்த அரசின் தலைமைச்செயலகத்தில் குப்பைக்கூடையில்மறைத்துவைக்கப் பட்டிருந்தமண்டல்அறிக்கையைவெளிக் கொணர்ந்தவர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுத்துறைகளில்வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைநடைமுறைப்படுத்தியதன் மூலமாக இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் மாநிலங்களை ஆட்சி செய்த பிற கட்சிகளுக்கு சம அளவு மரியாதை வழங்கப்பட்டது. மாநிலங்களுக்குள் குழுவை அமைத்தார். காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார்.

நாடாளுமன்றத்தில் மண்டல் அறிக்கையை  நடைமுறைப்படுத்திப் பேசுகையில், தந்தை பெரியார், பாபாசாகெப் அம்பேத்கர் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகிய சமூக நீதிக்காக தொண்டாற்றிய தலைவர்களின் கனவை நனவாக்கியதாகத் குறிப்பிட்டார்.

நேர்மைத்தன்மைகுறித்துபேசுகின்றஊட கங்கள்எப்போதுமேஅவரைமுன் னிறுத்துவதில்லை.வி.பி.சிங் வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவு மறைவின்றி அரசை நடத்திக்காட்டியவர். பொதுவாழ்வில் நேர் மையை கடைப்பிடித்தவர் ஆவார்.

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் வாழ்க! வாழ்க!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner