எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, ஜூன் 25- அனைவருக்குமான அரசு என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த சாமியார் ஆதித்யநாத் முதல்முதலாக இஸ் லாமியர்களைப் புறக்கணிக்கும் வகையில் அரசின் சார்பில் வழங்கப்படும் இப்தார் விருந்தை ரத்து செய்துள்ளார்.

இந்தியாவையே காவி நிறமாக மாற்று வேன், அதற்குத் துவக்கமாக உத்தரப் பிரதேசத்தை இந்துபூமியாக மாற்றுவேன் என்று 2013-ஆம் ஆண்டு அலகாபாத்தில் பேசியவர், தற்போதைய உ.பி. முதல்வ ரும், சாமியாருமான ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் எதிர்பாராத விதமாக பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, திடீர் திருப்பமாக இந்தி யாவையே காவியாக மாற்றுவேன் என்று கூறிய சாமியார் ஆதித்யநாத் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றார்.

ஆர்.எஸ்.எஸ். என்றாலே உயர்ஜாதி பார்ப்பனிய கொள்கை மட்டுமே என்ற கோட்பாட்டைக் கொண்ட பின்னணியில் வந்த யோகி, ஆட்சிக்கு வந்தது முதலே தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அதிரடி நடவடிக்கை களை எடுத்துவருகிறார். மாநிலம் முழு வதுமான வக்பு வாரியத்தை ரத்து செய்தது, இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களுடன் பேசினாலே அவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்துவது, இஸ்லாமியர்களின் தொழில் நிறுவனங் களுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை போடும் சட்டங்கள் கொண்டுவருவது போன்றவைகளுடன் தலித்துகளுக்கு எதி ரான நடவடிக்கைகளும் அதிரடியாக நடந்துகொண்டுவருகிறது.

ஆதித்யநாத், தான் ஓர் இஸ்லாமிய எதிரி என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார்.

முகலாயர் ஆட்சிக்காலத்தில் அரசர் களின் சார்பாக பொதுமக்களுக்கு ரம்சான் மாதத்தின் ஒரு நாளில் ஆக்ரா கோட்டையில் வைத்து அனைவருக்கும் விருந்து வைக் கும் ஒரு முறை தொடங்கப்பட்டது, இந்த விருந்தில் ஜாதி, மத பேதமின்றி அனை வரும் வந்து கலந்துகொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேயர் அரசி லும் ரமலான் சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது, முக்கியமாக ஆக்ரா, லக்னோ, டில்லி, போன்ற இடங்களில் நடைபெற்றது, பிறகு சுதந்திரம் அடைந்து உபி தனி மாநிலமாகப் பிரிந்த போது, உபியை ஆளும் அரசின் சார்பில் தலைநகர் லக்னோவில் இப்தார் விருந்து வழங்கும் முறை தொடர்ந்து நடைபெற்று வந்தது, 500 ஆண்டுகளாக தொடரும் இந்தப் பாரம் பரிய விருந்து நிகழ்ச்சியை தீவிர இந்துத்து வாவாதியும், சாமியாரும், உபி முதல்வரு மான ஆதித்யநாத் இந்த ஆண்டு முதல் வராக பொறுப்பேற்ற பிறகு தொடர்வாரா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

ஆனால் இப்தார் விருந்தின் இறுதிநாள் நெருங்கும் வரை அமைதியாக இருந்தார். இதனிடையே முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது, அதில் இனிமேல் அரசு சார்பில் இப்தார் விருந்து நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது மேலும்  அதில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போதைய நாட்டுமக்களின் அன்றாடத் தேவைகளைவிட இப்தார் விருந்து ஒன்றும் முக்கியமானதல்ல,

மேலும் முதல்வர் ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானவர் அல்லர். மேலும் பிற மதத்தவர் நடத்தும் விருந்தில் கோரக்பூர் மடத்தலைவர் கலந்துகொள்வது முறையாக இருக்காது, அது முதல்வருக்கும் பல இன்னல்களை ஏற்படுத்தும், மேலும் முதல்வர் கலந்துகொள்ளும் போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான உணர்வு ஏற்படாது என்று முதல்வர் நினைக்கிறார். என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

நவராத்திரி விருந்து

யோகி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இப்தார் விருந்துக்குப் போட்டியாக “நவராத்திரி மதிய விருந்து” என்ற ஒன்றைக் கொண்டுவந்தார். முக்கியமாக உபியின் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் நோன்புக் காலத்தின் போது யுவவாகினி அமைப்பினர் மதிய விருந்து வைத்து இஸ்லாமியர்களின் நோன்பை ஏளனம் செய்துகொண்டிருந்த போது அதற்குத் தாளம் போடுவதுபோல் சாமியார் ஆதித்யநாத்தும் தற்போது இப்தார் விருந்தை தடைசெய்துவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநில இத்ஹா இமாம் கூறியதாவது, இப்தார் விருந்து வழங்குவது, பல்வேறு தரப்பு மக்கள் வாழும் இந்த நாட்டில் அனைவரும் சகோதரர்களே என்பதைக் குறிக்கும் ஓர் அடையாளமாகும் ஆனால், இதை உபி.யின் தற்போதைய முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை, இது மிகவும் தவறான முடிவாகும் என்று கவலைதெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளாக மோடியும் பாரம்பரியமாக பிரதமர் இல்லத்தில் கொண்டாடும் இப்தார் விருந்தை ரத்துசெய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஜூன் இறுதிவாரத்தில் இப்தார் விருந்து அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner