எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சூர், ஜூன் 26 கேரளா பாஜக இளைஞரணி தலைவர் வீட்டில் இருந்து ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய்த் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளா மாநிலம் கொடுங்கலூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த வர் பாஜக இளைஞரணித் தலைவர் ராகேஷ். இவர் மற்றும் இவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரது வீடுகளில் இருந்து ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500, ரூ.50, ரூ.20 ஆகிய போலி ரூபாய்த்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் களிடம் இருந்து அச்சடிப்பு எந்திரமும் கைப்பற்றப்பட்டது.

கேரளாவில் குறிப்பாக திருச்சூர், கண்ணூர், எர்ணாகுளம் போன்ற நகரங்களில் அதிக அளவு புதிய போலி ரூபாய்த் தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து காவல்துறையினர் ‘‘ஆபரேசன் குபேரா’’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சிறப்பு தனிப்படை அமைத்து சோதனை செய்தனர்.

அப்போது கோழிக்கோடு மற்றும் திருச்சூர் பகுதியில் பிடிபட்ட சிலர் தங்களுக்குப் பிரபலமான அரசி யல் கட்சித் தலைவர் ஒருவர் கொடுத் தாகவும், அவர் பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவராகையால், நாங்கள் நம்பி அவரிடம் இருந்து இந்த ரூபாய்த் தாள்களைப் பெற்றோம் என்றும் கூறினார்கள். அதே நேரத்தில் இது போலி ரூபாய்த்தாள் என்று தங்களுக்கு தெரியாது என்றும் கூறியிருந்தனர்.

இதனை அடுத்து இவர்கள் குறிப் பிட்ட பாஜக இளைஞரணித் தலைவர் ராகேஷ் மற்றும் அவரது சகோதரர்களின் நடவடிக்கைகளை கவனித்து வந்தனர். மேலும் வாடகைக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்த இருவரும் குறுகிய காலத்திலேயே பெரும் செல்வந்தர்களாக மாறியிருந்தார்கள். போலி ரூபாய்த் தாள் தொடர்பான புகாரின் பேரில் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் இவரது வீட்டை பல பாகங்களாகப் பிரித்து, அச்சடிக்க ஒரு அறை, அச்சடித்த நோட்டுகளை வெட்டி வங்கியில் இருந்து பெற்ற ரூபாய்த் தாள்களுடன் கலந்து கட்டுகளாகப் பிரித்து வைக்க ஒரு அறை, இப்படி கலந்துவிட்ட ரூபாய்த் தாள்களை அடுக்கிவைக்க ஒரு அறை என ரூபாய்த்தாள் அச்சடிக்கும் நாசிக் நகர தொழிற்சாலை போன்றே சிறிய தொழிற்சாலையையே இவர்கள் வீட்டில் அமைத்து வைத்திருந்தனர்.

சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகளுடன் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் தாள்களும் பிடிபட்டன. இவற்றை புழக்கத்தில்விட சில முகவர்களை நியமித்திருந்தனர். அவர்களின் முகவர் தொடர்பு எண் கொண்ட டைரியும் கிடைத்தது. மேலும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

சில மாதங்களிலேயே இவர்கள் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாளைப் போன்றே போலி தாள்கள் கோடிக்கணக்கில் அச்சிட்டு புழக்கத்தில் விட்டிருக்கின்றனர்.  பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்ததால் இவர்கள் மீது யாரும் சந்தேகப்படவில்லை என்பதும், இதன் காரணமாகவே இவர்கள் குறுகிய காலத்திலேயே பெரும் பணக் காரர்கள், ஆகிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தில் பல பாஜக தலைவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியுள்ளனர். அதேபோல் சில பாஜக தலைவர்கள் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும், தொடர்ந்து ஊடகங்களில் படங்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மாநில இளைஞரணித் தலைவர் ஒருவரே கோடிக்கணக்கில் போலி ரூபாய்த்தாளை அச்சிட்டு விநியோகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

இவர் மாநில பாஜக கூட்டங் களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாரி வழங்கியுள்ளதும், சமீபத்தில் கேரளா வந்த அமித்ஷா முன்னிலையில் பாஜகவிற்கு நிதி வழங்கியுள்ளதாகவும் கேரள சமூக வலைதளங்களில் படத்துடன் தகவல் கள் வெளிவந்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner