எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, ஜூன் 26 உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, அரசாக அல்லாமல் விசாரணைக் குழுவாக மாறியுள்ளது என்று சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாள்களை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜவாதி அரசின் சில திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி சிபிஅய் விசாரணைக்கு யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, ஷியா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியங்களின் செயல்பாடு கள், கோமதி நதி மேம்பாட்டுத் திட்டம், நடமாடும் மழலையர் காப்பகங்கள் திட்டம் உள்ளிட்டவை குறித்து சிபிஅய் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாஜக அரசு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், அய்ஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்தும் சிபிஅய் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், யோகி ஆதித்தயநாத் தலைமையிலான பாஜக அரசு வெறும் விசாரணைக் குழுவாக மாறியுள்ளது.

இது முழுக்க முழுக்க பழிவாங்கும் அரசியலாகும். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றில் தனது தோல்விகளை திசைதிருப்புவதற்காகவே இத்தகைய தந்திரங்களை பாஜக அரசு கையாள்கிறது.

விசாரணை என்று வரும்போது மாநில காவல்துறையை யோகி ஆதித்தயநாத் நம்புவதில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே, அவர் எந்த விசாரணையையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் சிபிஅய் வசம் ஒப்படைக்கிறார் என்றார் ராஜேந்திர சவுத்ரி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner