எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கி.வீரமணி veeramani

1. தமிழ்நாட்டிலுள்ள சில கல்வியாளர்கள் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் கல்வித் தரம் குறைந்ததுதான் ‘நீட்’ தேர்வில் அதிக அளவு வெற்றி பெறாததற்குக் காரணம் என்று கிளிப்பிள்ளை போல திருப்பித் திருப்பிச் சொல்லுகிறார்களே, அவர்களுக்கு ஒரு கேள்வி.

அப்படியானால், தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களில் அகில இந்திய தரத்தில் 25 இல் ஒருவர்கூட வராததற்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கல்வி தரக்குறைவானதா?

2. தகுதியை நிர்ணயிக்க பொது அளவு கோல்தான் ‘நீட்’ தேர்வு என்கிறார்களே, அப்படியானால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் கொடுக்காதது ஏன்?

குஜராத்திற்கு ஒரு கேள்வித்தாள், தமிழ்நாட்டிற்கு ஒரு கேள்வித்தாளா?

3. மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற தேர்வுகளில் வெவ்வேறு கேள்வித்தாள்கள் கொடுப்பதுண்டா?

‘நீட்’ தேர்வில் மட்டும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது ஒரு திட்டமிட்ட சதியே!

4. ‘நீட்’ பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று சொல்கிறார்களே - அப்படியானால், காவிரி நீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா?

5. ‘நீட்’ பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாநில அரசு கூட்டத் தவறியது ஏன்?

6. பொதுமக்களும் தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், யாருக்கோ வந்த விருந்து என்று இருந்தது -இருப்பது சரியானதுதானா?

திராவிடர் கழகம் ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் வரும் ஜூலை 4 ஆம் தேதி அழைத்து - கலந்துரையாடி உரிய வகையில் கிளர்ச்சிகளில் ஈடுபடும்.

- தருமபுரியில் (27.6.2017)

செய்தியாளர்களிடையே  தமிழர் தலைவர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner