எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமூகநீதியின் கழுத்தை வெட்டும்  சம்பூகவதை மீண்டும் தொடர்கிறது!

ஜூலை 4 ஆம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் தோழமைக் கட்சிகளின் கூட்டம்

தமிழர் தலைவர் அழைப்பு

கி.வீரமணி veeramani

‘நீட்’ தேர்வு முடிவுகள் நாம் எச்சரித்தபடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதால் இது குறித்து கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முறையை அறிவித்தபோது, இதனால் சமூகநீதி பாதிக்கப்படும்; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களின் வாய்ப்புப் பறிக்கப்படும் என்று எச்சரித்திருந்தோம் - எதிர்த்துப் போராடியும் வந்துள்ளோம்.

நமதுவற்புறுத்தலின்பேரின்தமிழ்நாடுசட்டப் பேரவையில் அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப் பின் பேரில் ‘நீட்’ தேர்விலிருந்து விதிவிலக்கை வலியுறுத்தி சட்டமும் நிறைவேற்றப்பட்டது. எதை யும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு ‘நீட்’ தேர்வை செயல்படுத்தி விட்டது.

வெளிவந்துள்ள தேர்வு முடிவு - நாம் எச்சரித்த படியே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அகில இந்திய தர வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு 280 ஆம் இடம்தான். மேலும் 38 சதவிகித தேர்ச்சிதான் தமிழ்நாட்டில். அதோடு மட்டுமல்லாமல், மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய சட்ட விரோத, சமூகநீதி விரோத அணுகுமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தஆண்டுமருத்துவகல்விக்கானசேர்க் கையில்  இடஒதுக்கீட்டுப் பிரிவினரான பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 49.5 விழுக்காடு இடங்களுக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான 50.5 விழுக் காடு இடங்களுக்கான இட ஒதுக்கீடும் தனித்தனியாக நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரச் செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இட ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே அந்தந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படும்; அதிகமதிப்பெண்எடுத்தஇடஒதுக்கீட்டுப்பிரி வினருக்குக்கூட பொதுப்பிரிவில் வாய்ப்பளிக்கப் படாமல் பொதுப்பிரிவிலுள்ள 50.5% இடங்களும் உயர்சாதியினர் மற்றும் கிரீமிலேயர்கள் எனப்படும் பொருளாதார அடிப்படையில் மேம்பட்டவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு வசதியாக அனைத்திந்திய ஒதுக்கீட்டுக் கானதரவரிசைப்பட்டியலில்அனைத்திந்தியதர வரிசையுடன், இடஒதுக்கீடு அல்லாத பிரிவினருக் கான தரவரிசையும் வழங்கப்பட்டிருக்கிறது. இது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய சமூகஅநீதி ஆகும் - சட்ட விரோதமும் ஆகும்.

இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் கிடைக்க வேண்டிய இடங்கள் பார்ப்பனர்களுக்கும், இதர உயர்ஜாதியினருக்கும் மட்டுமே தாரை வார்க் கப்படும். அதாவது மொத்தமுள்ள 9775 இடங்களில் 4936 இடங்கள் பொதுப்பிரிவுக்கானவை ஆகும். இந்த இடங்கள் இட ஒதுக்கீடுப் பிரிவினர்களான தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்ஜாதியினரில் அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு உரியதாகும். இதுதான் சட்டத்தின் நிலைப் பாடாகும்.

ஆனால், தற்போது மத்திய அரசு இதில் ஒரு தில்லுமுல்லு வேலையைச் செய்துள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோரை - அவரவர் களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு, மீதி 50.5 அத் தனை சதவிகித இடங்களையும் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இன்னும் எளிதாகப் புரியும்படிச் சொன்னால் இட ஒதுக்கீடு இல் லாத உயர்ஜாதியினருக்கு 50.5 சதவிகித இடங்களையும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொடுத்துள்ளது. இதைவிட அப்பட்டமான மகாமோசடி வேறு ஒன்றும் இருக்க முடியாது. இதற்கு மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாளாயிருந்தால், தங்கள் உரிமையைப் பறிகொடுத்த வாழா வெட்டிகள், ஏமாந்த  சோணகிரிகள் இவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

சமூகநீதியின் கழுத்தை வெட்டும் சம்பூகவதை மீண்டும் தொடர்கிறது!

இந்நிலையில் வரும் 4 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு இதுகுறித்து பெரியார் திடலில் தோழமைக் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகநீதியாளர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

 

கி.வீரமணி  
தலைவர்,   திராவிடர் கழகம்.


முகாம்: தருமபுரி
27.6.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner