எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாசா, ஜூன் 27 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங் களை நாசாவின் ரோவர் கண்டு பிடித்துள்ளது.

செவ்வாயில் தண்ணீர் இருப் பதற்கான தடயங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆப்பர்ச்சுனிட்டி என்ற ரோவர், 2004 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது. தற் போது செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய ஏரி ஒன்று இருந்ததற்கான தடயத்தை ரோவர் கண்டுபிடித் துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தின் விளிம்பில் தற்போது ரோவர் உள்ளதாகவும், இந்தப் பள்ளம் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து காணப் படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தப் பள்ளம் மிகப்பெரிய ஏரியாக இருக்கலாம் என்றும், இதில் காணப்படும் பாறைகள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின் றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner