எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஜூன் 27 தமிழகத்தில் கீழடி அகழ்வாய்வில்

ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு முடக்குகிறது என்று மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர்கள் சங்கம், இந் திய மாணவர் சங்கம் இணைந்து சென்னையில் நேற்று (26.6.2017) நடத்திய தமிழ் உரிமை மாநாட் டின் ஒரு பகுதியாக நடைபெற்ற அரசியல் தலைவர்கள் அமர்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:

மோடி அரசின் 3 ஆண்டு ஆட்சியில் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்ற முடிய வில்லை. விவசாயிகளின் பிரச் சினைகளுக்குத் தீர்வு காணமுடிய வில்லை, வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இதி லிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்தியைத் திணிக்கிறார்கள். இந்தித் திணிப் பில் 2 நோக்கங்கள் உள்ளன. ஒன்று மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது, இன்னொன்று ஆர்.எஸ்.எஸ்.பற்றிய வெறுப்பு பாஜகவின் சித்தாந்தமாகிய இந் துத்துவா, இந்து தேசம் என்பதை நிலைநாட்டுவது - அதன் ஒரு பகு தியாகவே இந்தியைத் திணிக் கிறார்கள்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள் கொண்ட நாடாகத்தான் இந்தியா உருவானது. இந்த பன் முகத்தன்மைப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப் படுவது அவசியம். மற்ற மொழி களின் மீது ஒரு மொழியின் ஆதிக்கம் என்பது இந்திய ஒற்று மைக்குத் தான் பேராபத்தாக முடியும். இந்தி திணிப்பை எதிர்ப்பதும் இந்தியாவின் ஒற்று மைக்காகத் தான்.

ஆரியர்கள் தான் இந்தியாவின் பூர்வீக குடிகள் என்ற கோட் பாட்டுக்கு கீழடி அகழ்வாய்வின் உண்மைகள் எதிராக இருக்கின் றன. ஆகவே தான் அந்த அகழ்வாராய்ச்சியை முடக்குவ தற்கு மத்திய பாஜக அரசு முயல் கிறது. இந்தித் திணிப்பை எதிர்ப்பதும், பண்பாட்டு ஆக்கிர மிப்புக்கு எதிராக போராடுவதும் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது என்றார்.

இந்த மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக மாநிலங் களவை குழுத் தலைவர் கனி மொழி, மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner