எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 27 தேசிய பிற்பட்ட வகுப்பினர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கும் முடிவில், நாடாளுமன்ற குழுவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான மசோதா, மாநிலங்களவையில் நிறை வேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை கொண்டு வந்த தேசிய பிற்பட்ட வகுப்பினர் ஆணையத்திற்கு (என்சிபிசி) அரசியல்சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா, கடந்த ஏப்ரலில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இதில் உள்ள பல்வேறு விதிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதன்படி, இந்த மசோதா மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது, என்சிபிசி மசோதாவை நிறைவேற்று வதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 25 எம்.பி.க் களை கொண்டிருக்கும் தேர்வுக் குழுவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மசோதா மாநிலங்களவையில் மழைக்காலக் கூட்டத்

தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற் றப்பட வாய்ப்புள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner