எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூன் 29 இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்குப் பிறகு, கோரக்ஷாதள் அமைப்பினரால் தாக்கு தல்கள் அதிகரித்து, கொலைகளும் நடை பெற்று வருவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்த ஆய்வினை தொடர்ந்து அதிர்ச் சியான தகவல்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மாட்டு இறைச்சி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறைகளில், 86 சதவிகிதம் இஸ்லாமியர்கள் கொலை செய்யப் பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகே  97 சதவிகித தாக்குதல் சம்பவங்கள் நடைபெற் றுள்ளன.

இதற்கிடையில்,  அண்மையில் நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்த பின்னர், இந்தத் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் மாட்டு இறைச்சி விற்பனை மற்றும் மாட்டு இறைச்சி சாப் பிட்டது தொடர்பாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்து, இந்தியா முழுவதும் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 28 நபர்கள் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள் ளது.

கொலை செய்யப்பட்டவர்களில் 24 பேர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. இதுபோன்ற தாக்குதல்களில் 124 நபர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாட்டு இறைச்சி தொடர்பான வதந்தி களை நம்பி மட்டுமே 53 சதவித வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner