எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாளை மறுநாள் (ஜூலை 1) உலக மருத்துவர்கள் தினம்.

* மின் வழித்தட அமைப்பு பணிகளுக்கு ஜப்பான் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குவதை நிறுத்த மின் வாரியம் முடிவு.

* தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்.

* குடியரசு துணைத் தலைவரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

* சென்னையில் மாலை நேர உணவகங்களில் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறையினர் முடிவு.

* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13 ஆம் தேதி அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

* மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் துறைகளுக்கு இதுவரை ஏற்பட்ட இழப்பு ரூ.2,700 கோடி.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளையும் சேர்த்து தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை 54.

* முதன்முறையாக ரூ.200 நோட்டுகளை அச்சிடும் பணியை தொடங்கியது ரிசர்வ் வங்கி.

* கோயம்பேடு - செங்கல்பட்டு இடையே உயர்மட்ட சாலை அமைக்க தமிழக அரசு பரிசீலனை.

* பலதரப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.22 இல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

* மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 17 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

* பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு.

* கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் கட்டுமானப் பணி இன்று தொடங்குகிறதாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner