எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்ப்பனர் ஒருவர் பி.ஜே.பி. சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அடாவடித்தனமாக அரட்டை அடிப்பார், பெரிய சத்தம் கொடுப்பார், மற்றவர்களைப் பேச விடாமல் தடுப்பார். காரணம் சரக்கு வறுமை!

நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில் தான் யார் என்பதை சட்டைப்பொத்தானைக் கழற்றி பூணூலைக் காட்டி தோழர் மதிமாறனை மிரட்டும் பாணியில் கத்தினார்.

சிறுபான்மைச் சமூகமும், கடவுள் மறுப்பாளர்களும் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று வன்முறை தடித்த வார்த்தை களை வாரிக் கொட்டினார்.

அதன் காரணமாக சமூக வலை தளங்களில் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த ஆசாமி அவரது முகநூலில் என்ன எழுதுகிறார் தெரியுமா?

‘‘பெரியார் மணியம்மை அறக்கட்டளை குறித்து பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க வருமான வரித்துறை மற்றும் உரிய துறைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று முகநூலில் பதிவு செய்துள்ளார்!

எதற்கெடுத்தாலும் வருமான வரித்துறை என்று மிரட்டுவது பி.ஜே.பி.காரர்களின் வழக்கமாகி விட்டது. வருமான வரித்துறை என்பதெல்லாம் நாராயணன் அய்யர்களின் கைகளில்தான் இருக்கிறதா? அய்யன்மார்களின் ஏவல் துறையா அது? வருமான வரித்துறையின் மரியாதையை இப்படியா கேவலப்படுத்துவது!

தன்னை அறியாமலேயே  ஓர் உண்மையைக் கக்கி விட்டது இந்தக் கூட்டம். வருமான வரித்துறை ‘ரெய்டு’ என்பதெல்லாம் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் திட்டமிட்டே அரங்கேற்றப்படுகிறது என்ற எண்ணம்தானே பொதுமக்களுக்கு ஏற்படும்?

விவாதங்களில் வெல்ல முடியாத வெத்து வேட்டுக் கூச்சல்காரர்கள் இதன்மூலம் தங்களின் இயலாமையை, முகத்திரையைக் கிழித்துக் கொண்டு வெளியில் காட்டிக் கொண்டுவிட்டனரே!

வரட்டும், தாராளமாக எந்தத் துறைகளும் இந்த ‘நவீன துரை’களின் ஆணையை ஏற்று வரட்டும்! நாங்கள் அஞ்சியவர்கள் அல்ல, வரவேற்போம்!

எங்களுக்கொன்றும் மடியில் கன மில்லை - கள்ளநோட்டு அச்சடிப்பதுதான் பி.ஜே.பி.யின் இளைஞரணியினரின் திருக்கல்யாணக் குணம் என்பது ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது! வைத்தியரே முதலில் உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

பூணூல்கள் கருஞ்சட்டையோடு மோதிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!

ஆரியர் - திராவிடர் போராட்டத்தைத் தூண்ட முயற்சிக்கவும் வேண்டாம்!

1971 ஆம் ஆண்டில் மூக்கறுபட்டது போதாதா?

 

- கலி.பூங்குன்றன் -

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner