எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 1 பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா என்னும் நாட்டை ஒரே கலாச்சாரத்திற்கு மாற்றும் முதல் அடியை ஜி.எஸ்.டி மூலம் எடுத்து வைத்துள்ளார்கள்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்ட ஜி.எஸ்.டி. பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிடும், இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள்  ஆகையினால் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் மோடி அரசு எப்போதும் போல்  அலங்கார  அறிவிப்புகளுடன் தேசம் முழுமைக்குமான ஒற்றை வரி முறையை உரக்கப் பேசுகிறது. ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவி லிருக்கும் அனைத்து மாநிலங்களும் ஒரே வரி விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அத்துடன் அரசு வசூலிக்கும் வரிகள் மூன்று வகையாக இருக்கின்றன

மத்திய அரசு வரி, மாநில அரசு வரி,மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து வசூலிக்கும் வரி.

இந்த மூன்று முறைகளை எப்படி ஒற்றைவரி முறையில் கொண்டுவர இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இதுவரை எந்த ஒரு செயல்திட்டத்தையும் அருண்ஜெட்லி வெளியிடவில்லை. பொருள்களின் கொள்முதல் விலையை வியாபாரிகள் அவர்கள் லாபத்திற்கு ஏற்ப தீர்மானிக்கும் வசதியை வழங்கி இருப்பதால் லாபநோக்கத்தையே கொள்கையாக கொண்ட பெருமுதலாளிகள் இனி பெட்ரோல் விலையை போல் தினசரி ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். இன்று ஒரு தொகைக்கு ஒரு பொருளை வாங்க நினைத்து பணம் குறைவாக இருப்பதால் நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று சென்று விட்டு மறுநாள் சென்றால் நேற்றைய விலையை விட இன்று கூடுதலாக இருக்கும்.

நமதுநாட்டின் பூகோள ரீதியான நிலப்பரப்பை கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல் பட்டிருப்பது தெரிகிறது. அதுவும் குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி. குஜராத்தின் வரி விதிப்பு ஏன் மற்ற மாநிலங்களின் வரி விதிப்பிலிருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்.

அதற்கான அனைத்து காரணங்களையும் நிர்வாக ரீதியாகவும் அறிந்தவர். ஆனால் மோடி குஜராத்தும், அசாமும் ஒன்றுதான் என்கிறார். மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் ஒன்று தான். அது எப்படி ஒன்றாக இருக்க முடியும், இந்தியாவிற்கு அதிக வருவாய் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் 3 ஆம் இடத்திலுள்ளது. சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் நிலப்பரப்பு தமிழகம், மற்றும் மகாராஷ்டிராவை விடப் பெரியது.அப்படி இருக்க அதிக வருவாய் தரும் தமிழகம் போன்ற மாநிலங்களையும் வருவாயே தராத

சத்தீஷ்கர் போன்ற மாநிலத்தையும் ஒரே வரிசையில் எப்படி வைக்கமுடியும்? என்பது தான் இன்று மிகவும் முக்கியமான கேள்வி ஆகும். இப்படியான ஒற்றை வரிவிதிப்பின் மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு, வருவாய் இழப்பை மாநில அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது? மாநில அரசுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குமா? அதை யார் தீர்மானிப்பார்கள்? வறட்சி நிவாரணத்திற்கே ரூ.21,000 கோடிகளை கேட்ட தமிழகத்திற்கு வெறும் ரூ.900 கோடியை எலும்புத்துண்டு போல் வீசிய மத்திய அரசு, மாநில அரசின் வருவாய் இழப்பை எம்மாதிரி அணுகும்?

பாதகம்

காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி திட்டத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், விற்பனையாளர் அனைவரை யும் சிறிது சிறிது வரிகட்டும் பட்டியலில் இணைத்து விடு வதால் வரியின் ஒட்டு மொத்த சுமை நுகர்வோரின் தலையில் விழாது. இதுதான் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம்.

ஆனால் பாஜக செய்வது என்ன?

அனைத்து வரியையும் நுகர்வோர் தலையில் கட்டிவிட்டது,  இதனால் வியாபாரிகள் எளிதாக வரிஏய்ப்பு செய்து பணம் பதுக்குவார்கள். முக்கியமாக மேல் மட்டத்தில் இருந்து கடைகோடி வணிகர்கள் வரை என ஏய்க்கும் நுணுக்கத்தை தெரிந்துகொண்டால் எளிதாக வரிஏய்ப்பு செய்துவிடுவார்கள். அருண் ஜெட்லியின் கணக்குப்படி 18விழுக்காடு முதல் 28விழுக்காடு வரி பல்வேறு பொருட் களுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, கடலைப் பருப்பிற்கு குறைவான வரி, வெல்லத்திற்கு குறைவான வரி, எரிவாயுவிற்கு அதிக வரி, தயாரிப்பு மற்றும் பேக்கிங் பொருட்களுக்கு வரி அதிகம். இப்போது இதை எல்லாம் சேர்ந்து கடலைமிட்டாய் தயார் செய்தால் கடலைமிட்டாய்க்கு வரி அதிகம். இப்போது தயாரிப்பாளர் என்ன செய்வார். சாதாரணமாக கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்படும் 10 ரூபாய் கடலை மிட்டாய் இனி 15 முதல் 20 ரூபாய் வரை விற்கவேண்டும், இந்த விலை உயர்வை நுகர்வோர் ஏற்க மாட்டார்கள். இதனால் கடலைமிட்டாய் வியாபாரம் முற்றிலும் சீர்குலைந்துவிடும். இதனால் இந்த தொழிலில் உள்ள நடுத்தர தொழில் முனைவோர் பெரிய பாதிப்பிற்குள்ளாவார்கள். பெரிய நிறுவனங்கள் இதில் சில வரிஏய்ப்பு வேலைகளைச் செய்து எனர்ஜி பார் என்ற பெயரில் பெரிய அங்காடிகளில் விற்பனைக்கு வைப்பார்கள். ஜி.எஸ்.டி வரிவசூலிக்கும் முறையைக் கண்காணிக்க சரியான அமைப்பு இதுவரை உருவாகவில்லை என்பது மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று ஆகும்.

ஜி.எஸ்.டி ஜூலை ஒன்றாம் தேதி -அன்று அறிமுகப்படுத்தப் படும் என்று அறிவித்த பிறகு ஜூன் மாதங்களில் பல நிறுவனங்கள் தங்களில் பொருட்களை தள்ளுபடி விலைக்கு விற்றது, மக்கள் கூட்டமும் அலைமோதியது. பொருட்களின் விலைவாசி ஜூலை ஒன்றுமுதல் உயர்ந்துவிடும் என்ற குறிப்பை காட்டிவிட்டது.

அமைதி காட்டும் ஊடகங்கள்

இதனை முன்பு ஆதரித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இது நல்ல திட்டம் தான் ஆனால் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், இல்லாமல் மிகவும் அவசரப்பட்டு ஏன் மக்களிடம் திணிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். மம்தா பானர்ஜிக்கு இருக்கும் சமூக அக்கறை பல்வேறு மாநிலத்தில் ஆளும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு கேட்கும் துணிச்சல் இல்லை. பணமதிப்பிழப்பை   வர லாற்றுச் சாதனை என்று எழுதிய ஊடகங்கள் அதன் தோல்வியை அப்படியே மறைத்துவிட்டன. இது குறித்து ரிசர்வ் வங்கியையோ, மோடியையோ, அருண் ஜெட்லி யையோ இதுவரை எந்த ஒரு ஊடகமும் கேள்வி கேட்கவில்லை.

ஏற்கெனவே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா தூக்கி வீசப்பட்டு விட்டது, அதுபோதாது என இப்போது ஜி.எஸ்.டி மூலம் இந்தியாவை மேலும் மோசமான பொருளாதாரச்சூழலுக்கு கொண்டு செல்ல விருக்கிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த மூன்றாண் டுகளில் செய்த நல்ல விஷயம் ஒன்றாவது உண்டா? தன்னுடைய தோல்வியை மறைக்க பண மதிப்பிழப்பு என்ற ஒன்றை அதிரடியாக அறிவித்து மக்களை திசைதிருப்பினார்கள். இன்று ஜி.எஸ்.டி என்ற ஒன்றை திணித்திருக்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner