எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 1  பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கடந்த 3 ஆண்டுளில் நாடுமுழு வதும் 23 பேர் கொலை செய் யப்படுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விபரம் மூலம் தெரிய வந்துள்ளது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனித உயிர்களை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடி பேசிய 24 மணி நேரத்திற்குள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட் டிறைச்சி வைத்திருந்ததாக ஓட் டுநரை ஒரு கும்பல் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது. சொந்த மாநிலமான குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி, பசு பக்தி என்ற பெயரில் மனித உயிர்களை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, சட்டம், ஒழுங்கை கையில் எடுக்க எந்த தனிநபருக்கும் உரிமை கிடையாது என பேசி னார். அவர் பேசி முடிப்பதற் குள் ஜார்கண்ட் மாநிலம்,  ராம்கார்க் மாவட்டத்தில் பஜார் டாங்க் என்ற இடத்தில் வேனில் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக கிடைத்த தகவலையடுத்து   பசு பாது காப்பு குண்டர்கள் வேனை மறித்து,  வேன் ஓட்டுநரை அடித்தனர். இந்த தாக்குதலில் வேன் ஒட்டுநரான அஸ்கார் அன்சார் என்பவர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டம்  நிலவி வருகிறது. இது போன்று பசுவின் பெயரில் கடந்த 3 ஆண்டுகளில் 23 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 32 தாக் குதல் சம்பவங்கள் நடந் துள்ளது. உச்சகட்டமாக  4 பெண்களை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்து கொலையும் செய்துள்ளனர். நாடும் முழுவதும் பசுவின் பெயரில் மனிதர்கள் மீது  நடந்து  வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பசுவின் பெயரில்  அரியானா, உபி, மத்திய பிரதே சம்  உள்பட 12 மாநிலங்களில் தினசரி ஏதாவது முறையில் வன்முறையாட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 2014  முதல் டிசம்பர் 2015ஆம் ஆண்டு வரை 11  தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. அதே போல 2016-இல் 12 தாக்குதல், 2017ஆம் ஆண்டின் கடந்த  6 மாதங்களில் 9 தாக் குதல் சம்பவங்கள் நடந்துள் ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருக்கும் கட்சிகள் இந்த மோசமான செயல்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த சம்பவங்கள் பெரும் பாலும் வட மாநிலங்களில் நடந்து வருகிறது. உள்துறை செயலகத்தின் 2015-2016ஆம் ஆண்டு  அறிக்கையில் 1454 மதச்  சண்டைகள் நாடு முழு வதும் நடந்ததாகவும், இதில் 183 நபர்கள் கொலை செய்யப் பட்டும், 4585  நபர்கள் காயம் பட்டதாகவும் மாநில அரசுகள் கொடுத்த புள்ளி விபர அறிக் கையின்படி இந்தப் பட்டியலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சில வழக்குகள் பயங்கர மோசமாக இருக்கிறது. காட்டு மிராண்டித் தனமான செயல் களும் அரங்கேறியுள்ளது. மாட்டுக் கறியை உண்டதாக 14 வயதுப் பெண்ணை 5 பேர் சேர்ந்து கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத் திற்கு வந்தது. மாட்டிறைச்சியை உண்டதால் உன்னை பாலியல் வன்புணர்வு செய்கிறோம் என்று சொல்லி என்னை பாலி யல் வன்புணர்ச்சி செய்தனர் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இது போல நாடு முழுவதும் பல்வேறு சம்ப வங்கள் நடந்து வருகிறது. முஸ்லீம் அல்லாத தலித்துகள், பழங்குடியினர்கள் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடந்து வருவது அதிகரித்து இருக் கிறது. குஜராத்தில் 4 தலித் ஆண்களை மாட்டிறைச்சி உண்டதாக பொது இடத்தில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வந்து அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுவரை பசுவின் பெயரில் நடந்த தாக்குதல்களில் 13 சம் பவங்களில் மட்டுமே  சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் பட்டு  இருக்கிறது. அதுவும் பெயரளவில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் தரப் பில் கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner