எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், ஜூலை 1 -குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட் டியிடும் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், பிரச்சாரத்தைத் துவக்கினார்.

முன்பே அறிவித்தது போல, குஜராத் மாநிலத்தி லுள்ள  காந்தியாரின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து, மீரா குமார் பிரச்சாரத்தைத் துவங்கினார். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பரத் சின்ஹா சோலங்கி, சங்கர் சிங் வகேலா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றிய மீரா குமார், குடியரசுத் தலைவர் தேர்தல் இருவேறு சித்தாந்தங் களுக்கு இடையேயான போட் டியே தவிர இரண்டு தலித்து களுக்கு இடையேயான போட் டியல்ல! என்றார்.

குடியரசுத் தலைவர் தேர் தலில் போட்டியிடுவதன் மூலம்,  காந்தியாரின் சித்தாந் தத்தை முன்னெடுப்ப தற்கான போராட்டத்தையே தான் துவங் கியுள்ளதாகவும், பிரச்சாரத்தை சபர்மதி ஆசிரமத்திலிருந்து துவங்குவதற்கு காரணமும் அதுதான் என்று மீரா குமார் குறிப்பிட்டார்.குஜராத்தில் இருந்துதான் காந்தியின் சித் தாந்தம் தேசம் முழுவதும், உலகம் முழுவதும் பரவியதாக வும் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் தங்களின் மனசாட்சிப் படி வாக்களிக்க வேண்டும் எனவும் மீரா குமார் கேட்டுக் கொண்டார்.

இன்று மாலை சென்னை வருகிறார்

குஜராத்தில் பிரச்சாரத்தை துவங்கியதன் அடுத்தகட்டமாக மீரா குமார், சனிக்கிழமையன்று தமிழ்நாடு வருகிறார். இங்கு, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மீரா குமார் ஆதரவு திரட்டு கிறார். மாலை 4.30 மணியள வில் சென்னை வரும் மீரா குமார், இரவு 7 மணிக்கு திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று, அங்கு திமுக செயல் தலைவர்மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகி களைச் சந்தித்து, அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைக் கோரி உரை யாற்றுகிறார். 7.40 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் சென்று அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் இரவு 8.30 மணியளவில் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கலைஞரையும் மீரா குமார் சந்திக்கிறார். சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமை யன்று கார் மூலம் புதுச்சேரி செல்லும் மீரா குமார், அங்கு புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆத ரவு திரட்டுகிறார். அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பி, மாலை 4.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப் பட்டு செல்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner