எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டில் 177 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டில் நீர் வழிச் சாலை அமைத்தால் 75 லட்சம் ஏக்கரில் கூடுதலாக விவசாயம் செய்யலாம். 1800 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும்.

***

புறம்போக்கு நிலத்தில் என்ன பயிரிடலாம் என்று திகைக்க வேண்டாம். பசுந் தீவனம் பயிரிட்டு லாபம் பெறலாம் என் கிறார் கால் நடைப் பயிற்சி மய்ய முதன்மை ஆராய்ச்சி யாளர்கள் சரஸ்வதி மற்றும் ராஜேஷ்குமார்.

***

அரிசியைப் பட்டை தீட்டாமல் பழுப்பு அரிசி யாக சாப்பிடுவதுதான் நல்லது. ஆனால் மக்கள் வெண்மையான அரிசியை விரும்புவதால் பட்டை தீட்டும் வேலை நடக்கிறது. இதனால் வெறும் கார்போ ஹைட்ரேட்டைத்தான் சாப் பிடுகிறோம். சர்க்காரையிலும் இதுதான் நடக்கிறது.

***

பேக்கரியில் சாதாரணமாக வாங்கி சாப்பிடும் பொருள் களுக்கு 18 விழுக்காடு வரி, பெட்டிக் கடையில் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டாலும் 18 விழுக் காடு வரி, ஆனால் பீட்சா, பர்கருக்கு மட்டும் 5 விழுக் காடு வரியாம்!

***

உலகில் முகநூல் (Face Book)
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டியது.

 

சொல்லுவது
எம்.எஸ். சுவாமிநாதன்


பிஜேபி அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட் டார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? வட இந்தியாவில் பணப் புழக்கத்தை இழந்த விவசாயிகளின் வாழ்வை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியது என்கிறார் பிரபல எம்.எஸ். சுவாமிநாதன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner