எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரோதாக் (அரியானா), ஜூலை 3 முஸ்லிம்களையும், தலித் மக்களையும் குறிவைத் துத் தாக்கும், பசுப் பாதுகாப்பு குழுக்களின் நடவடிக்கைகளை கிரிமினல் நடவடிக்கைகள் என்றும் அவற்றை சட்டவிரோத மானவை என்றும் அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக யெச்சூரி மேலும் கூறியிருப்பதாவது:  காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற பிரதமர் மோடி பசுக் களின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படு வதை ஏற்க முடியாது என்று கூறினார்; ஆனால் அவ்வாறு கொலை செய்பவர்கள் மீது அவரது அரசாங்கம் என்ன நடவடிக்கை களை எடுத்திருக்கிறது என்று அவர் கூறவில்லை. மோடி குஜராத்தில் பேசிய கொஞ்ச நேரத்திலேயே ஜார்க்கண்டில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட் டிருக்கிறார்.

வேளாண்துறையில் முன் னெப்போதும் இல்லாத அள விற்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது. மகாராஷ்டிராவி லும், மத்தியப்பிரதேசத்திலும் விவசாயிகளின் பெருந்திரளான எழுச்சி இதனை நன்கு பிரதி பலித்தது. கடனில் மூழ்கியுள்ள விவசாயிகள் தங்களைக் காப் பாற்றிக் கொள்வதற்குத் தங்கள் கடன்களை ரத்து செய்யவேண் டும் என்று கோரிக்கை வைக் கின்றனர். ஆனால், இவ்வாறு கோருவது ஒரு ஃபேஷனாக போய்விட்டது என்று ஒரு மத்திய அமைச்சர் கிண்டலடித் திருக்கிறார். விவசாயிகளைக் கடன்வலையில் தள்ளியது பாஜக அரசாங்கங்கள்தான். விவசாயிகள் தங்களின் விளை பொருள்களுக்கு ஆகும் செல வினத்தில் ஒன்றரைபங்கு அளித்து, அவர்களிடம் அந்த விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்தது பிரதமர் மோடிதான்.

இப்போது பாஜக அரசாங் கங்கள் தாங்கள் கூறிய தேர்தல் உறுதி மொழிகளிலிருந்து பின் வாங்கிக் கொண்டு விட்டது. ஜிஎஸ்டி வரிக் கட்டமைப்பா னது கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் பய னளிக்கக் கூடியது. இது, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் புரிவோரையும், சாமானிய மக்களையும் கடுமையாகப் பாதிக்கும். ஜிஎஸ்டி வரி தொடர்பாக நாடாளு மன்றத் தில் விவாதம் நடத்தப்படும் என்றுஎன்னிடம் நிதி அமைச்சர் நாடாளு மன்றக் கூட்டத் தொடரின்போது உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால்அந்த உறுதிமொழியை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. நாடாளு மன்றத்தைக் கலந்தா லோசிக்காமல் அதனை ஓரங் கட்டிவிட்டு, ஜிஎஸ்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். போதுமான முன்தயாரிப்பு வேலை களைக் கூட செய் யாமல் ஜிஎஸ்டி வரியை மக்கள் மீது மோடி அரசாங்கம் திணித்துள்ளது.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரியானா மாநிலச் செயலாளர் சுரேந்தர் சிங் மற்றும் முன்னாள் செயலாளர் இந்தர்ஜித் சிங் ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner