எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி ஜூலை 3 பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மதவெறிக்கும்பலால் பொதுமக்கள் அடித்துக் கொலை  செய் யப்படும்  சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பசுப் பாதுகாப்பு குண்டர்கள் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் பொது மக்களை அடித்துக் கொல்லும் கொலை வெறி சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஜனநாயக நாட்டில் மதச்சார் பின்மைக்கு வேட்டு வைக்கும் இச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு இதழின் தொடக்க விழா நடைபெற்றது.  இதில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி பேசியதாவது: பொது மக்களை எந்த ஒருவிசாரணையுமே இல் லாமல் அடித்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.  இந்த தேசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை காப் பாற்ற நாம் விழிப்புடன் செயல்படு கிறோமா? பொதுமக்களை வன்முறைக் கும்பல்கள் அடித்துக் கொல்லும் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இவற்றை நாம் உடனே நிறுத்தியாக வேண்டும், என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தாமதமாக வாய் திறந்த

குடியரசுத் தலைவர்

பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டு. அரியானா மாநிலம், ரதியாபாத் என்ற இடத்தில் இஸ்லாமியர் ஒருவர் பசு இறைச்சி கொண்டுசென்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப் பட்டார். பின்னர் அவர் சொந்த காரணங் களுக்காக கொலைசெய்யப்பட்டார் என்று காவல்துறையினர் வழக்கை முடித்து விட்டனர். 2015-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் அக்லாக் படு கொலையை அடுத்து   பசுவின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகிற்கு தெரியவந்தது.  இதனை  தொடர்ந்து இஸ்லாமியர்கள் பசுவின் பெயரால் படுகொலைசெய்யப்பட்டு வந் தனர். ஆனால் மத்திய அரசோ இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.  மத்திய அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியே வந்தனர். உத்தரப் பிரதேசத்தில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய தாவது: நாம் பசுவை காப்பாற்ற உயி ரையும் தர தயாராக இருக்கிறோம், ஆனால் பசுவைச்சாப்பிடுவது எங்கள் உரிமை என்று டில்லியில் போராட்டம் நடத்துகின்றனர். என்று கூறினார். இது போன்ற பேச்சுக்கள்  பசுவின் பெயரால் கொலைசெய்பவர்களுக்கு ஊக்கத்தைத் தந்தது.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானாவில் நடந்த ஒரு நிகழ்ச் சியில் பேசிய மோடி பசுப் பாதுகாவ லர்களைக் கண்டித்தார். மிகவும் முக்கிய பொறுப்பில் உள்ளவர் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு மேடையில்   பேசுவது பசுப்பாதுகாவலர்களுக்கு மேலும் ஊக்கத்தையே தந்தது, விளைவு பஹலுகான், ஜுனைத், உசைன் அன்சாரி உள்ளிட்ட 28 பேர் கடந்த ஆகஸ்ட் முதல் ஜூன் வரை பசுப்பாதுகாவலர்களால் கொலைசெய்யப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறும் இக்கொலைகளுக்கு பேசாமல் இருந்த குடியரசுத்தலைவர் தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் போது கண்டனம் தெரிவித்திருப்பது மதவெறிக்கும்பலுக்கு எந்த ஓர் அச்சத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner