எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோல்கட்டா, ஜூலை 5- மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று செய்தியாளர்களை சந் தித்து பேசுகையில், ஆளுநர் என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் கூறு கையில், ஆளுநர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். அவரது செயல் பா.ஜ.க.வினர் பேசுவது போல் உள்ளது. இது என்னை வருத்தமடைய செய்கி றது. இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபட வேண்டாம் என் பதை அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.

அவர் பா.ஜ.க. வட்டச் செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்கு இது ஏற்புடையதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பெரிதாக பேசுகிறார். நான் யாரிடமும் இருந்தும் கரு ணையை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner