எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, ஜூலை 5- மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ரவீந்திர பவாந்தாடே. இவர் சமீபத்தில் நாக்பூரில் இருந்து சந்திராபூர் நோக்கி பேருந்தில் சென்று கொண்டி ருந்தார்.

அப்போது அவர், தன்னு டன் வந்த பெண்ணை பேருந் தின் பின்புறம் அழைத்துச் சென்று யாரும் பார்க்காத வகையில் முத்தமிட்டுள்ளார். ஆனால், இந்த காட்சி அங்கிருந்த சிசி டிவி கேமராவில் பதிவாகியுள் ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து, சம்பந் தப்பட்ட பா.ஜ.க. தலைவர் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனக்கு வேலை வாங்கி தருகிறேன். விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் என ரவீந்திரா ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய நான் அவருடன் பேருந்தில் சென்றேன். ஆனால், கட்சிரோலி பகுதியில் வரும்போது, ஆசை வார்த்தை கூறி பேருந்துக்குள் வைத்து என்னை பாலியல் வன்முறை செய்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினரும் பாஜகவினரும் இது வரை எந்த அறிக்கையும் தர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner