எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஹாசன், ஜூலை 5-  ஹாசன் டவு னில் உள்ள தனியார் கல்லூரி யில் நேற்று ஹாசன், மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, சாம் ராஜ்நகர் ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோ சனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்- அமைச் சர் சித்தராமையா கட்சி நிர்வா கிகள் மத்தியில் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பொய்களை கூறி மக் களை ஏமாற்றி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இங்கு கொண்டு வந்து ஏழைகளுக்கு தருவதாக கூறினார்.

மேலும் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள் ளது. பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தற்போது அனைத்து மாவட் டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆதி திராவிட மக்களின் வீடுகளுக்கு சென்று உணவு சாப்பிட்டு வருகிறார்.

உண்மையிலேயே பா. ஜனதா கட்சியினருக்கு ஆதி திராவிட மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களது கட்சி யில் உள்ள உயர் சாதியினரை ஆதிதிராவிட, பிற்படுத்தப் பட்ட மக்களின் வீடுகளின் சென்று முதலில் சம்பந்தம் செய்யட்டும். அப்போது அந்த கட்சியின் உண்மை முகம் மக்களுக்கு தெரியவரும்.

இந்த சரக்கு, சேவை வரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கி ரஸ் அரசு கொண்டு வந்த திட் டம் ஆகும். அப்போது இதை எதிர்த்த மோடி, தற்போது இர வோடு, இரவாக சரக்கு, சேவை வரியை அறிமுகப்படுத்தி பேசுவது பா.ஜனதா கட்சிக் கும், மோடிக்கும் அவமானமாக இல்லையா?.

தற்போது மத்தியில் உள்ள பா.ஜனதா கட்சியால் ஜனநாய கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. எனவே ஜனநாயகத்தை காப்பாற்ற வருகிற 2019ஆ-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தி யில் அமையவேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner