எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வசாய், ஜூலை 5- வியாபாரம் விருத்தியாக மளிகை கடைகார ரிடம், இளம்பெண்ணின் இரு தயத்தை கேட்ட 3 மந்திரவாதி கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் வரு மாறு:

பால்கர் மாவட்டம் வான் காவ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது36). மளிகை கடை நடத்தி வருகிறார். வியாபாரத் தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தார். இந்த நிலை யில், அவருக்கு தேவ்நாத் (30), விஜய்நாத் (25), பிரபுநாத் (25) ஆகிய 3 மந்திரவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.

குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரை சேர்ந்த அவர்கள் வியா பாரத்தில் விருத்தி ஏற்படுத்துவ தற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்காக சஞ்சயிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை வாங் கினார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவர்கள் சஞ்சயை அழைத்தனர். அதன்பேரில் அவர் 3 பேரையும் சந்தித்தார். அப்போது, பெரிய அளவில் பூஜை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு ரூ.5 லட் சம் மற்றும் இளம்பெண் ஒரு வரின் இருதயம் தேவைப்படு கிறது என்றனர்.

அதை வைத்து பூஜை செய்து மதிய உணவாக நாங்கள் அதை சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் தான் உனது வியா பாரம் செழிப்படையும். எனவே ஒரு இளம்பெண்ணின் இருத யத்தை எப்படியாது கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டு உள்ளனர்.

இதை கேட்டு சஞ்சய் பத றிப்போனார். உடனே அவர் வான்காவ் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். பின்னர் காவல்துறையினர் கொடுத்த யோசனையின்படி 3 பேரையும் தகானு பகுதியில் சாரோட்டி பகுதிக்கு வரும்படி அழைத்தனர்.

இதை நம்பி மந்திரவாதிகள் 3 பேரும் வந்தனர். அப்போது காவல்துறையினர் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner