எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிளிநொச்சி, ஜூலை 9 இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து உண்மைகளைத் தெரியப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி 138 நாள்களாக ஈழத் தமிழர்கள் போராடி வருகின்றனர். போராடி வருபவர்களில் பெரும்பான்மையோ ராக பெண்கள் உள்ளனர். அதிலும் வயதில் முதிர்ந்த பெண் மணிகள் பலர் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தமிழக தலைவர் தமி ழிசை சவுந்தர்ராசன் கிளி நொச்சிப் பகுதிக்கு சென்ற போது, போராட்டத்தில் ஈடு பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராமல்,  வீதியிலேயே நின்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

மக்களில் சிலர் கொடுத்த மனுவை வாங்கிய அவர், “தமக்கு இவ்வாறான மக்களை சந்திக்க வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து ஆர்டர் வந் திருக்கு’’ என்று கூறினாராம். ஆனால், இவரே, நல்லூரில் உள்ள ஆதீன மடத்துக்குச் சென்று ஆதீனத்தின் மடாதிபதி யாகிய சோமசுந்தர தேசிக பர மாச்சாரியரை மட்டும் ஆதீன மடத்தில் சந்தித்து பேசியுள் ளார். கிளிநொச்சியில் பெரும் இன்னலுற்று, உறவுகளை இழந்து தவித்து வாடி, போராடிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்களை சந்திக்கக் கூடாது என்பது தான் மேலி டத்து உத்தரவு என்று பாஜக வின் தலைவர் கூறுகிறார் என்றால், தமிழர்கள் மேல் எள் முனையளவிலும் பாஜகவின ருக்கு அக்கறை என்பதே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இந் துக்களுக்காகவே உள்ள அமைப்பாக பரப்புரை செய்து வருகின்ற நிலையில், கிளி நொச்சியில் உறவுகளை இழந்து போராடும் தமிழர்களை சந்திக் கக்கூடாது என்று கூறி யதன் மூலமாக, தமிழர்களை இந் துக்கள் என்று பாஜக வகை யறாக்கள் ஏற்கவில்லை என் பது தெளிவாகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner