எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சண்டிகர், ஜூலை 1-0 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரியானா முதல் வரின் கல்வித் தகுதி குறித்து கேட்ட போது முதல்வர் அலுவலகம் எதற்கும் விடையளிக்காமல் அமைதிகாத்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதி பட்டப்படிப்பு எனவும், டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த பிரிவில் பட்டம் வாங்கினார், எந்த ஆண்டு வாங்கினார் போன்ற வேறு எந்த விவரமும் அதில் குறிப்பிடப் படவில்லை.

இது தொடர்பாக வழக்குரைஞர் ஹேமந்த் குமார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,முதல்வர்  பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்.  ஆகியவற்றில் எந்த பிரிவில் பட்டம் பெற்றார். அவர் கல்வி கற்ற ஆண்டு எது, அவர் பட்டப்படிப்பை முடித்த ஆண்டு எது, எந்த கல்லூரி,  டில்லி பல்கலைக்கழகத்தில் எந்த பிரிவில் அவர் படித்தார்? அவர் கல்விகற்றபோது அவர் பெற்ற  மதிப்பெண்களின் விவரம் என்ன? போன்ற தகவல்களை கேட்டி ருந்தார்.

அந்த மனு, முதலில் அரியானா சட்ட சபைக்கு அனுப்பப்பட்டது.  அங்கு அந்த விவரங்கள் இல்லை என திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.  பின்பு அந்த விவரங் களைக் கேட்டு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கும் இது தொடர் பான எந்த விவரமும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும், எங்களிடம் இது தொடர்பான எந்த தகவலுமில்லை என்ற பதிலுடன் திரும்பி வந்துள்ளது. மேலும் அவர் இந்த மனு குறித்து மேல் முறையீடு செய்ய ஒரு மாத அவகாசமும் கொடுக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்பாக அரியானாவின் சபா நாயகர் கன்வர்பால் பற்றி அரியானா சட்டமன்ற இணையதளத்தில் அவர் கல்வித்தகவலில் பி.ஏ. என குறிப்பிடப் பட்டது.  அதன் விவரங்களை பற்றி ஹேமந்த்குமார் கேள்வி எழுப்பினார். அவருடைய கேள்விக்குப் பின் அவரது கல்வித்தகவலில் அவர் பி.ஏ. படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கல்வியை முழுமையாக முடிக்காவிட்டால் அவரின் முந்தைய கல்வித்தகுதிதான் சேர்க்க வேண்டும், அதன் படி 12 ஆம் வகுப்பு என்று தான் குறிப்பிடவேண்டும், ஆனால் சபாநாயகர் பள்ளிக்கல்வி குறித்த எந்த தகவலும் இல்லை, அவர் வயது வந்த குடிமகன் என்ற முறையில் பட்டப் படிப்பிற்கு தொலைதூரக் கல்வி மூலமாக விண்ணப்பித்திருந்தார்.

மோடி, ஸ்மிருதி இராணி மற்றும் பல பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகுதி குறித்து வழக்கு நீதிமன்றத் தில் உள்ளது. ராஜஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சரின் கல்வித்தகுதியும் போலியா னது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது. இந்த வகையில் தற்போது அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் விவகாரமும் வெளிவந் துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner