எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, ஜூலை 11 கோவை மாவட்டம் தொண்டா முத்தூரை அடுத்த பூளுவப்பட்டி யில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதையடுத்து அப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் "பூளுவப் பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை கைப்பந்து விளை யாடிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப் போது, அந்த வழியாகச் சென்ற காளப்பாளையத்தை சேர்ந்த சிவா என்பவர் இளைஞர்களின் தகராறை விலக்கி, அவர்களைக் கண்டித்துள்ளார்.
இதில் சிவாவிற்கும் அவர் களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிவா வுக்கு அடி விழுந்துள்ளது. அத னைக் கேள்விப்பட்ட சிவா வின் மகன் சுரேந்திரராஜா கொந்தளித்துள்ளார். உடனே அவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார் மற்றும் சிலருடன் இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று, சிவாவை தாக்கியதைப் பற்றி விசாரித்துள்ளார்.

இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள் ளது. இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பு மற்றும் கற் களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது இந்து முன்ன ணியைச் சேர்ந்தவர்கள் அகதி கள் முகாம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இத்தகராறில் காயமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரமேஷ் குமாரையும்
மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுமனையும், கோவை அரசு மருத்துவமனையில் காவல் துறை யினர் சிகிச்சைக்காக சேர்த்துள் ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் ஆலாந்துறை காவல்துறையினர் இருதரப்பைச் சேர்ந்த பத்திற் கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். முகாமைச் சுற்றி  கண்காணிப்புப் பணியில் அதி ரடி படையினர் ஈடுபட்டுள் ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner