எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூவிருந்தவல்லி, ஜூலை 11 பூவிருந்தவல்லியை அடுத்த கீழ்மா நகர் பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நடத்துவது குறித்து பேசப்பட்டது. அப்போது தனி நபர் ஒருவர் மட்டும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனியாக திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதனால் கோவில் ஆடி திரு விழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.  இதுகுறித்து இரு தரப்பினரும் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக  பூவிருந்தவல்லி வட்டாட்சியர் லட்சுமணன் இரு தரப்பில் இருந்தும் 5 பேர் வீதம் 10 பேரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழு மலை, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இருதரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.  ஆனால் அதற்கு காலக் கெடு வேண்டும் என்று இருதரப்பினரும் கூறியதையடுத்து மீண்டும் வரும் 15ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner