எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாவங்கள் போகும் எனும் மூடநம்பிக்கை ஆற்றில் விடப்பட்ட துணிகளால் பாழாக்கப்பட்ட தாமிரபரணியாறுதாமிரபரணி, ஜூலை 17 நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் பகுதியை ஒட்டியுள்ள  தாமிரபரணி நதியில் கூடு கின்ற பக்தர்கள் தாமிரபரணியாற்றில் நீராடி தாங்கள் அணிந்திருக்கும் ஆடை களை பாபநாசம் அம்மன் படித்துறை ஆற்றில் கழட்டிவிட்டால் அதனுடன் தாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற மூடநம்பிக்கையில் ஆடைகளை ஆற்றில் கழற்றிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி அவர்கள் விட்டுச்செல்கின்ற துணிகள் அனைத்தும் ஆற்றில் நீரோட் டத்துக்கு இடையூறாக சேர்ந்து, மாசுக் கேட்டை பெரிய அளவில் ஏற்படுத்தி வருகின்றன.

பக்தர்கள் படித்துறையில் துணிகளைக் கட்டிவிட்டுச் சென்றதால், காலப்போக்கில் தாமிரபரணி ஆறு 120 அடி அகலத்திலிருந்து 18 அடி அகலத்துக்கு குறுகி நீரோட்டத்துக்கு வழிவகை இல்லாமல் பாழாக்கப்பட்டது. மேலும், தவளைகள், மீன்கள் என நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

80 டன் கழிவுத் துணிகள்

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் முயற்சி செய்து, குழுவாக இணைந்து தாமிரபரணியாற்றின் படித்துறையில் கட் டப்படிருந்த  துணிகள், தாமிரபரணியாற்றின் பல்வேறு பகுதிகளிலும் மாசுக்கேடுகளை ஏற்படுத்தி ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குப்பையாகிப்போன துணிகளை அப் புறப்படுத்தும் பணியை துணிந்து செய் தார்கள். அந்த வகையில் அப்பகுதியில் 80 டன் கழிவுத் துணிகளுடன் இருந்த மாசுக் கேடுகளை தூர்வாரி தாமிரபரணியாற்றை செப்பனிட்டுள்ளார்கள்.

இந்த பணிகளை கடந்த 14 வாரங்களாக எந்த ஒரு விளம்பரமும் இன்றி இளை ஞர்கள், மாணவர்கள் குழுவாக இணைந்து ஆற்றிய பணி பாராட்டத்தக்க பணியென்று அனைவராலும் பாராட்டப்பெற்றது குறிப் பிடத்தக்கது
பாநாசம் பகுதியில் தாமிரபரணியாற்றில் அம்மன் படித்துறை பகுதியில் இருந்து மட்டும் இதுவரை கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றின் நீர்வழிப்பதையை அடைத்துக் கொண்டு கிடந்த துணிகளை அகற்றி இருப்பதாக தெரிவிக்கிறார் இந்த அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராம்.

நோய்கள் தொற்றும் அபாயம்!

பக்தர்கள் பாபநாசம் தாமிரபரணி யாற்றின் அம்மன்படித்துறைக்குச் சென்று  வழிபடும்போது பாவங்கள் போகும் எனும் மூடநம்பிக்கையால் ஆற்றிலேயே ஆடைகளை கழற்றிவிட்டுச் செல்கின்றனர்.  அதனால் அம்மன் படித்துறையில் தாமிர பரணி ஆறு கடுமையாக மாசடைந்துள் ளதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ள தாகவும் மாசுக் கட்டுப்பட்டு வாரியம் எச்சரிக்கை வெளியிட்டபோதிலும் கடந்த பல ஆண்டுகளாகவே மாசுக்கேடுகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வருகின்றன.

வெளியூர்களிலிருந்து கூடுகின்ற பக்தர்களால், அப்பகுதியில் நிலத்தடி நீர் முதல் காடுகள் வரை பிளாஸ்டிக் சேர்ந்த குப்பைகளாய் காட்சியளிக்கின்றன என்று அப்பகுதிவாசிகள் கவலை வெளியிடு கின்றனர்.

பாவம் போகாது!


இதே நிலை நீடித்தால் எதிர்கால சந்ததிகளுக்கு நோய் மட்டுமே மிச்சமாய் இருக்கும் என்பதும் இவர்களது அச்சமாய் இருந்து வருகிறது. எனவே தாமிரபரணியில் தூய்மைப் பணியை உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து சாதித்தும் காட்டி உள்ளனர் இந்த தன்னார்வ தொண் டர்கள். பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை கழற்றி விட்டால் பாவம் தீராது; மாறாக நமது வருங்கால சந்ததியி னருக்கு கேடு வந்து சேரும்..! என்பதை உணர்ந்தாவது பாவம் போகும் எனும் மூடநம்பிக்கையைக் கைவிடுவார்களா?


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner