எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஜூலை 17 குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற விருக்கும் தேர்தலை குறுகிய, பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான போராட் டம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவைகளில் வெற்றி பெறத் தேவையான உறுப் பினர்களின் எண்ணிக்கை வேண் டுமானால், நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த போராட்டத்தில் நாம் நிச்சயம் போராட வேண்டும். அதுவும் தீவிரமாக போராட வேண்டும்.

குறுகிய மனப்பாங்கு, பிளவு படுத்துதல், மதவாத அரசியலை திணிக்க விரும்புவோரிடம், இந்தியாவை பிணையாக நாம் ஒப்படைக்கக் கூடாது. நாம் யார்? சுதந்திரப் போராட்ட காலத் தில் நாம் எதற்காக போராடினோம்? நமக்கு எத்தகைய எதிர்காலம் வேண்டும்? என்பதை அறிந்து கொண்டு, அவர்களை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். நமது கொள்கைகள் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். இந்தத் தேர்தலானது (குடியரசுத் தலைவர் தேர்தல்), சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலாகும். வேறுபட்ட கொள் கைகளுக்கு இடையேயான யுத்தமாகும்.

காந்தியார் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போராடி நமக்கு பெற்றுத் தந்த இந்தி யாவை பாதுகாப்பதற்கு, இந்தத் தேர் தலில் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட் டுள்ளது.

இங்கு வந்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிகளுக்கானத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட் டியிடும் மீரா குமார், கோபால கிருஷ்ண காந்தி ஆகியோருக்கு ஆதரவு அளிப்பதிலிருந்து, அனைவரையும் உள்ளடக் கிய, சகிப்புத் தன்மை கொண்ட, பன் முகத்தன்மை கொண்ட இந்தி யாவை முன்னெடுத்துச் செல்வது சாத்தியம் என்பதை ஊர்ஜிதப் படுத்தியுள்ளன என்று சோனியா காந்தி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner