எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் மற்றும் இருவர் மரணம் அடைந்தனர் என்பதும், 48 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நெஞ்சைப் பிளக்கும் துயரச் செய்தியாகும்.

மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அந்தக் குடும்பங்களுக்கு கணிசமான அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்  என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

அடிக்கடி நிகழும் தீ விபத்துக்களுக்கான உண்மை காரணத்தை அறிந்து, உரிய வகையில் பரிகாரம் காணப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

சென்னை      தலைவர்
17-7-2017       திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner