எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கட்டா, ஜூலை 17 மேற்கு வங்க அரசுக்கு எதிராக, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய, பா.ஜ.க. - எம்.பி.,யும், நடிகையுமான, ரூபா கங்கு லிக்கு எதிராக,  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட் டுள்ளது.

மேற்கு வங்கத்தில், திரி ணாமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த, மாநிலங்களவை, எம்.பி.,யும், நடிகையுமான, ரூபா கங்குலி, மேற்கு வங்க அரசுக்கு எதிராக, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். 'மேற்கு வங்கத்தில், மனைவி யரும், மகள்களும், பாலியல் வன் முறைக்கு ஆளாகாமல், 15 நாட்கள் வரை தப்பிப்பது கடினம்' என, ரூபா கூறிய கருத்துக்கு, திரிணமுல் காங்., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ரூபா கங்கு லிக்கு எதிராக, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில், ரூபா கங்குலிக்கு எதிராக, காவல் துறையினர் எப்.அய்.ஆர்., பதிவு செய்துள்ளனர். மேலும், மேற்கு வங்க, பா.ஜ., தலைவர் திலீப், சமீபத்தில் பேசுகையில், 'எனக்கு எதிராக பொய் வழக்கு போட்டு, காவல்துறையினர் கைது செய்தால், முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டை தீயிட்டு எரிப்போம்' என, கூறி யதாக தெரிகிறது. இதை யடுத்து, திலீப்புக்கு எதிராக, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner