எழுத்துரு அளவு Larger Font Smaller Font



சென்னை, ஜூலை 7 ‘நீட்’ நுழைவுத் தேர்வு குறித்து தமிழக சட்டமன்றம் நிறை வேற்றியுள்ள மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடத்துவதென தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

இதில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர் பெருந் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலை மையில் செயல்படும் ஜன நாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு குறித்து, கடந்த 04.07.2017 அன்று கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது.


அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், மமக, இ.யூ.மு.லீக், எஸ்டிபிஅய் உள்ளிட்ட ஏராள மான கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், நீட் நுழை வுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராக வும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.  எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி தமிழக அரசு இயற்றி யுள்ள சட்டங்களுக்கு குடிய ரசுத் தலைவர் இதுவரை ஒப் புதல் அளிக்காதது குறித்து அக் கூட்டத்தில் கண்டனம் தெரி விக்கப்பட்டது.


மத்திய அரசு ஒப்புதல் வேண்டும்

‘நீட்’ நுழைவுத் தேர்விலி ருந்து தமிழ்நாட்டிற்கு விலக் களிக்க வேண்டும்; தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங் களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மாநிலப் பட்டியலில் மீண்டும் இணைத்திடவேண் டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 12ஆம் நாள் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவ தெனவும், இந்த ஆர்ப்பாட்டத் தில் பெருந்திரளாக மாண வர்கள் பங்கேற்க வேண்டுமெ னவும் அக்கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.
பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும்


அதன்படி, ஜூலை 12ஆம் நாள் தமிழகமெங்கும் நடை பெறும் ஆர்ப்பட்டத்தில் விடு தலைச்சிறுத்தைகள் பெரும் அளவில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உணர்வை மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக் கொள் கிறேன். அத்துடன், விடு தலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவரணியினரும் பெரு வாரியாகப் பங்கேற்றிட வேண் டுமெனவும் அழைப்பு விடுக் கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள், உடனடியாக டில் லிக்குச் சென்று நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுவர உரிய நட வடிக்கை எடுக்கவேண்டுமென வும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வலி யுறுத்துகிறோம்.

இவ்வாறு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் விடுத் துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner