எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை, ஜூலை 7- தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிஅனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரிடமிருந்து பதில் வரும் வரை மருத்துவப் படிப்பிற் கான கலந்தாய்வை நடத்தக்கூடாது.

மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள குழப் பத்திற்கு உரிய தெளிவினைத் தமிழக அரசு கோரிப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் நேற்று (6.7.2017)  பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

நீதிபதி டி.அரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி டி.அரிபரந் தாமன் பட்டினிப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், 12ஆம் வகுப்பு தேர்வை அரசுதானே நடத்து கிறது. அப்படி இருக்கும் போது நுழைவுத் தேர்வு எதற்கு என வினா எழுப்பினார். இது மாநில உரிமையை பறிக்கும்செயல். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ‘நீட்’ தேர் வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டம் இயற்றி யுள்ளனர். ஆனால் மத்திய அரசு அதை அங்கீகரிக்காமல், மதிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இது மாணவர்களை மட்டுமல்ல தமிழக மக்களை மதிக்காத போக்கு என்று அவர் கூறினார்.

ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது உரையில்,  எங்கள்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தமிழ் நாடு சட்டமன்றம் இயற்றிய மசோ தாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார். அதற்கு குடியரசுத் தலைவரின் செயலாளர் அப்படி ஒரு மசோதா வரவில்லை, எனினும் நீங்கள் அந்த கடிதத்தை உள்துறைக்கு அனுப்புங்கள் என பதில்கடிதம் அனுப்பினார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால் அந்த பிரச்சனை பொதுப் பட்டியலில் இருப்பதால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அரசுஒப்புதல் அளித்த பின்புதான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப் பார். ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என பகிரங்கமாக கூறிவிட்டது. தமிழக அரசு மசோ தாவை மத்தியஅரசுக்கு அனுப்பினால் மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் திரட்டிபோராடினால்தான் மத்திய அரசை பணிய வைக்க முடியும். எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனைத் துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரிடமும், குடியரசுத் தலைவரிடமும் கோரிக் கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட வேண்டும். அடுத்த தேர்தலில் மீண்டும் அவர் வெற்றி பெறக் கூடாது என உறுதியான முடிவெடுத்து போராட வேண்டும் என்று கூறினார். போராட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பி னர்கள் டி. கே. எஸ். இளங்கோவன், மாநில அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, முகமது அபுபக்கர், அப்துல் சமத்(மனித நேய மக்கள் கட்சி), கல்வி உரிமை பாது காப்பு கூட்டமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர் நா.மணி, தமிழ்நாடு நல்வாழ்வு இயக்க தலைவர் சீ.ச.ரெக்ஸ், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் செ.அருமைநாதன், சரிநிகர் முற் போக்கு திருமண மய்யத்தின் பூங் கோதை. அறிவியல் இயக்கத்தின் மணி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் உள்ளிட் டோரும் கலந்து கொண்டு பேசினர் .பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந் திரபாபு தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி நிறைவு செய்து உரை யாற்றினார். ஏராளமான ஆசிரியர் களும், பெற்றோர்களும், மாணவர் களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner