எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு 'துக்ளக்'கில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கவனித்தார்களா என்று தெரியவில்லை, 'துக்ளக்' எழுதியுள்ளவை இதோ!)

உண்மையான அக்கறை திருவாளர் அமைச்சர் பெருமகனுக்கோ, அவரது துறை அதிகாரிகளுக்கோ இருந்திருந்தால், எங்கெங்கோ பட்டி, தொட்டிகளில் 'பள்ளிக்கூடம்' என்ற பேரில் நின்று கொண்டிருக்கிற, எப்போது இடிந்து விழுவோம் என்று தெரியாத கட்டிடங்களைப் பற்றியோ, அதில் படிக்கிற ஏழை மாணவர்கள், அங்கு வேலை பார்க்கிற ஆசிரியர்கள் என்கிற பிழைப்புவாதிகளைப் பற்றியோ அமைச்சரின் அறிக்கை, பேட்டிகளில் வெறும் தகவல்களாவது வந்து விழுந்திருக்கும்.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்களின் கல்வித் தரம் ஒழுங்காக இருந்தால் அல்லவா மாணவர்களின் கல்வியில் தரம் வரும். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கே வருவதில்லை.

லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, படித்து ஆசிரியர் வேலையில் சேருகிறவருக்கு, மாணவர்களின் படிப்பைப் பற்றி என்ன கவலை? மாணவர்கள் படித்தாலென்ன, கழுதை மேய்க்கப் போனாலென்ன? அவர்களுக்கு என்ன வந்தது? ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் விடுவது, கடை கண்ணியைத் திறந்து வியாபாரம் செய்வது என்று சகல பிஸினஸ்களிலும் இறங்கி விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கக் கூட நேரமில்லை.

ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைக்கு வருகிறார்களா, வேலைக்கு வந்தால் முழு வேலை நேரத்தையும் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க எந்த வழியுமில்லை. இதையெல்லாம்தான் நீதிபதி கிருபாகரன் தனது உத்திரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வளவு மோசமான நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், தங்கள்  பிள்ளைகளைச் சேர்க்க தமிழர்களுக்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?
ஆசிரியர்களே 'துக்ளக்'கை தெரிந்து கொள்வீர்!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner