எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி, ஜூலை 19- நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி மாநி லங்களவையில் தமிழக எம் பிக்கள் முழக்கமிட்டனர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அவையின் மய்யப் பகுதிக்கு வந்து முழக்கமிட்ட னர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. நேற்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் மாநிலங்களவை யில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக் கக்கோரி திமுக, அதிமுக, காங் கிரஸ் எம்.பி.,க்கள் அவையின் மய்யப்பகுதியிக்கு வந்து முழக் கமிட்டனர். நீட் தேர்வால் தமி ழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.

இதேபோல் மக்களவை யிலும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை இன் றும் ஒத்திவைக்கப்பட்டது.

மருத்துவ குணம் கொண்டதா பசு மூத்திரம்?

மத்திய அமைச்சர் தலைமையில் குழு ஆலோசனையாம்

புதுடில்லி, ஜூலை 19- பசு மூத்தி ரம் மருத்துவ குணம் கொண் டதா என்பது குறித்து மத்திய அமைச்சர் தலைமையிலான குழு அடுத்த மாதம் கூடி ஆலோசனை நடத்த உள்ளது.

பஞ்ச கவ்வியம் எனப்படும் பசுவின் மூத்திரம், சாணம் உள்ளிட்ட கழிவுகள் மருத்துவ குணம் கொண்டதாக நம்பப் படுகிறது. ஆனால் இது குறித்து அறிவியல் பூர்வ ஆய்வுகள் எதுவும் உறுதியான முடிவுகள் எதையும் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அறி வியல்  மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தலைமையிலான குழு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்த குழு வில் சிஎஸ்அய்ஆர் முன்னாள் தலைவர் மாஷேல்கர் உள் ளிட்ட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள டில்லி அய்அய்டி பேராசிரியர் வி.கே.விஜய் கூறுகையில், பசுவின் மூத்திரம், சாணம் உள்ளிட்ட பால், நெய், வெண்ணெய், மோர் உள்ளிட்டவற்றின் மருத் துவ குணம், ஊட்டச்சத்து தன்மை உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை இதன் உறுப்பினர்கள் கூட்டம்  நடை பெற வில்லை. உறுப்பினர்க ளுக்கு பல்வேறு முக்கிய பணி கள் இருந்த காரணத்தால் இந்த கூட்டம் தாமதமானது. தற்போது இந்த கூட்டமானது அடுத்த மாதம் கூட திட்டமிடப்பட்டுள் ளது. பஞ்சகவ்யத்தின் அறிவி யல் பூர்வ மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றிற்கான ஆராய்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார். நாளந்தா பல்கலையின் வேந்தர் விஜய் பத்கர், டில்லி அய்அய்டி இயக்குனர் ராம் கோபால் ராவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப் பான விஞ்ஞான் பாரதியின் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இந்த குழுவில் இடம் பெற் றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner