எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 19- தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  நாளை (20ஆம் தேதி) சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வு குறித்து விவா தித்து போராட்டம் குறித்த முக்கிய முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன் பழகன் வெளியிட்ட அறிக்கை:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (20ஆம் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் நடைபெறும். அதுபோது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள் கிறேன். கூட்டத்தில் முரசொலி பவள விழா மற்றும் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப் படும். இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் கூறியுள்ளார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner