எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீநகர், ஜூலை 16 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனிக்குகைக்கு  பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பக்தர்கள் மற்றும் போலீசாரை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற் கிடையே, கடந்த 10ஆ-ம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் 7 பக்தர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த லலிதா (47) என்ற பெண் பக்தர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதைதொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண் ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner