எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுச்சேரி, ஜூலை 16 புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவல கத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அமைச்சர் நமச் சிவாயம் தலைமை தாங்கினார். காமராஜர் உருவப் படத்திற்கு முதல்அமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

காமராஜர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடு படுத்திக் கொண்டு, பலமுறை சிறை சென்று எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றிவர். தன்னல மற்றவர், அப்பழுக்கற்றவர், ஊழலில் திளைக்காதவர், தீண் டாமை ஒழிப்புக்காக போராடி யவர்.

பதவிக்கு வந்தபின் கட் சியை உதறித்தள்ளுவது, கட்சிக்காரர்களை மதிக்காமல் இருப்பது, சொந்த செல்வாக் கில் வந்துவிட்டதாக நினைப் பதெல்லாம் தவறு. அரசியல் கட்சி இல்லாமல் பொது வாழ்க்கையில் யாரும் ஒளிர முடியாது. காங்கிரஸ் கட்சியில் நான் இல்லை என்றால் நான் சாதாரண நாராயணசாமி.

தற்போது ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக கூறு கின்றனர். ஆட்சியை கவிழ்க்க முடியாது. புதுவையில் காங் கிரஸ் -- தி.மு.க கூட்டணி பல மாக உள்ளது. நியமன எம். எல்.ஏ. விவகாரத்தில் அனை வரும் ஒருங்கிணைந்து நடத் திய முழு அடைப்பு போராட் டம் புதுச்சேரியை ஒரு உலுக்கு, உலுக்கி உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் பா.ஜ.க. எவ்வளவு தூரம் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. சட்டமன்ற தேர் தலில் டெபாசிட் இழந்தவர் களை கொல்லைப்புறம் வழி யாக சட்டசபைக்குள் பா.ஜ.க. திணித்துள்ளது.

சட்டமன்றம் அமைப்ப தற்கு முன்பாக தேர்ந்தெடுக் கப்பட்ட அல்லது நியமனம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.விற்கு பதவியேற்பு செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. சபாநாயகர் தேர்வு செய்யப் பட்ட பின் அந்த அதிகாரம் சபாநாயகருக்கு போய்விடும். முதல்அமைச்சர், அமைச்சர் களின் பரிந்துரைப்படித்தான் ஆளுநர் செயல்பட முடியும். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவ காரத்தில் ஆளுநரும், மத்திய அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ள னர்.

காங்கிரஸ், தி.மு.க. கூட் டணிக்கு மக்கள் கொடுத்த ஜனநாயக உரிமைகளை பறிக் கும் செயலில் பா.ஜ.க. ஈடுபட் டுள்ளது. மக்களால் பெரும் பான்மை பெற்றவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அனைவரும் விவரம் தெரிந்தவர்கள். அத னால் தான் முழுஅடைப்பு போராட்டத்திற்கு முழுமை யான ஆதரவை கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner