எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேசுவரம், ஜூலை 16 இலங்கை கடற்படை சிறை பிடித்த, 158 படகுகளில், 42 படகுகள் விடுவிக்கப்பட்டன.ராமேஸ்வரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின், படகுகளை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

மூன்றாண்டுகளில் மட்டும், 158 விசை, நாட்டுப் படகுகளை, மன்னார், புத்தளம், யாழ்ப் பாணம் காரை நகர், திரி கோணமலை கடற்கரைகளில் நிறுத்தி உள்ளனர். இந் நிலையில், 2015ஆம் ஆண்டு வரை, சிறை பிடித்த, 42 படகு களை விடுவிக்க இலங்கை முன்வந்தது. நேற்று முன்தினம், காரை நகரில் உள்ள, 27 படகுகளை யாழ்ப்பாணம் நீதி மன்றம் விடுவித்தது.

மன்னார், புத்தளத்தில் உள்ள, 15 படகுகளை, நாளை விடுவிக்க இலங்கை அட்டர்னி ஜெனரல், நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியதாக ராமேசு வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

பாம்பன் மீனவர் சங்கத் தலைவர், யூ.அருளானந்தம் கூறியதாவது: சிறை பிடிக்கப் பட்ட, 158 படகுகளையும் விடு விக்காமல், 42 படகுகளை மட்டும் இலங்கை அரசு விடுவித் துள்ளது தமிழக மீனவர்களுக்கு வேதனை அளிக்கிறது. மன் னாரில் இருந்த, 13 படகுகள் சூறாவளி காற்றில் சிக்கி கடலில் மூழ்கின. அப்படகு களின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கி, சிறையில் வாடும், 77 மீனவர்கள், மீதமுள்ள, 116 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner