எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசிறீநகர், ஜூலை 20  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட் டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர் நாத் குகைக்கோயிலில் ஆண்டு தோறும் இயற்கையாகத் தோன் றும் பனிலிங்கத்தைக் காண  ஜம்மு வழியாக பக்தர்கள் பயணம் செய்வார்கள்.

இந்த ஆண்டு  யாத்திரைக்கு சென்றவர்களில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. தரிசனம் முடிந்து மலைப்பாதை வழியாக இறங்கிவந்த பக்தர் ஒருவர் நேற்று மாலை மூச்சுத் திணற லால் உயிரிழந்தார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பக்தர் மத்தியப்பிரதேசம் மாநி லத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இதனால், உடல் நிலை சார்ந்த உபாதைகளால் இந்த யாத்திரை காலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், சாலை விபத்துகளில் 20 பக் தர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை காலத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித் துள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner