எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீத்தாராம் யெச்சூரி

புதுதில்லி, ஜூலை 20 மாநிலங்களவையில் புத னன்று, பசுக் குண்டர்களின் அட்டூழியம் தொடர்பாக பிரச் சினை எழுப்பி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசிய தாவது:

ஒருவர் என்ன முழக்க மிடுகிறார் என்பதை வைத்து அவரது நாட்டுப் பற்றை கணிக்க முடியாது. பாரத் மாதா கி ஜே சொல்பவர் மட்டுமே நாட்டுப்பற்று மிக்கவர் அல் லர்; இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய பகத்சிங்கும் நாட்டுப்பற்று உடையவர் தான்.இந்தியா எப்படி அமைந் திட வேண்டும் என்பது குறித்து மூன்று விதமான தொலைநோக் குப் பார்வைகள் இடையே சுமார் 70 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இடதுசாரிகளுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை உண்டு. மத அடிப்படையில் இயங்கும் சங் பரிவாரம் மற்றும் இஸ்லாமிய அடிப் படைவாதக் கட்சிகளுக்கு ஒரு பார்வை உண்டு.

சுதந்திரம் பெற்றபின் நம் இந்தியக் குடியரசை மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியர சாகத்தான் ஏற்படுத்தி இருக் கிறோம். ஆனால் இதனை மாற்றியமைக்க வேண்டும் என் பதே பசுக் குண்டர்களின் நோக் கமாகும். இதனை அனுமதிக்க முடியாது. நான் என்ன சாப்பிட வேண்டும், நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் எனக்கு உத்தர விடமுடியுமா? இத்தகைய குண்டர் படைகளுக்கு உடனே தடை விதித்திட வேண்டும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner