எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஜூலை 20 ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாராவில் விவசாயிகள் கூட் டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களவையில் இன்று விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச விரும்பினோம். பிரதமர் கூட அவையில் இருந் தார். ஆனால் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை. மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்றவில்லை. பயிர்கடன்களை ரத்து செய் யுமாறு 2 கோடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜி.எஸ்.டி.யால் பெரிய வர்த் தகர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சிறு குறு வணிகர்கள் துன்பப்படுவார்கள் என்பதால் பாஜக அரசு அவசர அவசரமாக ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்ய வேண்டாம், மூன்று நான்கு மாதங்கள் பொறுத் திருங்கள் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. வரு மான வரி செலுத்துவோருக்காக அரசை நடத்தவே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பெரிய வணிகர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் களால் 10 கணக்காளர்களை வேலைக்கு வைத்து, பல படி வங்களை பூர்த்தி செய்து சமர்ப் பிக்க முடியும். ஆனால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள் ளனர். சிறு தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலித் துக்களைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

மேக் இன் இந்தியாவைப் பற்றி பிரதமர் மோடி பேசு கிறார், விவசாயிகளை புறக் கணிக்கிறார். பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. இதைப் பார்த்து உ.பி.யில் பா.ஜ.க. அரசு விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner