எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஜூலை 21 இந்தி திணிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்காக ஜூலை 25ஆ-ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலந் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாக கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்த ரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண் டும், நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும், பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூலை 25ஆ-ம் தேதி மாநி லம் முழு வதும் 300-க்கும் மேற்பட்ட மய் யங்களில் மத்திய, மாநில அரசு அலுவல கங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner