எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு ஜூலை 21 மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு விரைந்து நிறை வேற்ற வேண்டும் என முன் னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடா கேட்டுக் கொண்டார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற மஜத மகளிர் அணி மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

நான் (தேவகவுடா) பிரதம ராகப் பதவி வகித்த போது மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய் யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் நிறை வேற்றப்படாமல் உள்ளது.

எனவே, மத்திய அரசு உடனடியாக மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்கள வையில் நிறைவேற்றி அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளதால், சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்த மசோதாவை நிறை வேற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரி விக்கும். மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநி லத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கு 84 தொகுதிகள் ஒதுக்கப்படும்.

இதனால் மகளிர் அதிகம் பயனடைவார்கள்.  மகளிருக்கு இட ஒதுக்கீடு அளித்தால் மட் டுமே நாடு வளர்ச்சிப் பாதை யில் செல்ல முடியும் என்றார்.

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 8-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

நெய்வேலி, ஜூலை 21 என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் மாதத்தில் 29 நாட்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் வேலை நாட்களை 19 நாட்களாக குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   நேற்று 8ஆ-வது நாளாக அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner