எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி:  அத்வானியை குடியரசுத் தலைவர் வேட் பாளராக அறிவிக்காதது ஏன்?

பதில்: அத்வானிக்கு நிகர் அத்வானி தான். ஆனால் அவரை அறிவித் திருந்தால், அவர்மீது ராமஜென்ம பூமி வழக்கு உள்ளதே என்று  அலறி யிருப்பார்கள். இப்போது வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

- 'விஜயபாரதம்' 14.7.2017, ஆர்.எஸ்.எஸ். வார இதழ்

ஓ,  அப்படியா? பாபர் மசூதி இடிப்பு வழக்கு இருந்த இதே அத் வானிதான் இந்தியாவின் துணைப் பிரதமராகவே இருந்தார். முரளி மனோகர் ஜோஷியும், உமா பாரதியும் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். நாடாளுமன்றத்திலே இது குறித்து 'சுனாமி' சுழன்றடித்தது. பாபர் மசூதி குற்றவாளிகள் எப்படி மத்திய அமைச்சர்களாக இருக்கலாம் என்று எதிர்க்கட்சியினர் கிழி கிழி என்று கிழித்தனரே - பதவி விலகினார்களா அத்வானி வகையறாக்கள்?

யாருக்குக் காது குத்து கிறது 'விஜயபாரதம்'? இரண் டாயிரத்துக்கு மேற்பட்ட இசுலாமியர்களின் படு கொலைக்குக் காரணமாக இருந்த நரேந்திர மோடி பிரதமராக ஆகிடவில்லையா!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "நீரோ  மன்னனுக்கு" ஒப் பிட்டு உச்சநீதிமன்றம் விமர்சித்ததே நினைவிருக்கிறதா? அத்தகையவர் எப்படி பிரதமர் ஆக்கப்பட்டாராம்?

மோடியைவிட மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங்சவுகான் பிரதமருக்கான சிறந்த வேட்பாளர் என்று  எல்.கே. அத்வானி சொன்னாரே - அப்படிப்பட்ட அத் வானி குடியரசுத் தலைவராக மோடி சம்மதிப்பாரா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner