எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: ராமாயணம் போன்ற பழைய கதைகள் இன்றைய வாழ்க்கைக்கு எப்படிப் பயன்பட முடியும்?

பதில்: இந்தியன் வங்கி சேர்மனாக இருந்த டி.எஸ். ராகவன் 'குமுதம்' வார இதழில் 'ராமாயணத்தில் மேனேஜ்மென்ட்' என்று எழுதிய கட்டுரைகளை வானதி பதிப்பகம் 'உன்னால் மட்டும்தான் முடியும்' என்று வெளியிட்டுள்ளது. உங்கள் கேள்விக்கு அந்தப் புத் தகமே பதில்.
- 'விஜயபாரதம்' 14.7.2017

(ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)

இராமாயணத்தில் சம்பூ கன் என்பவன் தவமிருந் தான் என்பதற்காக ராமன் வாளால் வெட்டிக் கொன் றான். அதற்குச் சொல்லப் பட்ட காரணம் வருண தர்மப்படி சூத்திரன் தவ மிருக்க அருகன் அல்லன். வருண தர்மத்தை மீறி சூத்திரன் தவமிருந்ததால் 'பிராமண'ச் சிறுவன் மரணம் அடைந்தான்.

வருண தர்மம் மீறி தவம் இருந்த சூத்திரன் சம்பூகனை அரசனான ராமன் வாளால் வெட்டிக் கொன்ற அந்த வினாடியிலேயே செத்துப் போன 'பிராமண'ச் சிறுவன் உயிர் பிழைத்தான். இராமா யணத்தில் மேனேஜ் மென்ட்டின் யோக்கியதை இதுதான். இது இந்தக் காலத்துக்கும் பொருந்தும் என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழ் எழுதுகிறது என்றால், அதன் பார்ப்பன வருணா சிரமப் புத்தி அதன் குரு தியை விட்டு விலகவில்லை என்பது தெரிகிறதா இல் லையா?

"சக்ரவர்த்தி திருமகன்" என்ற நூலை எழுதியவர் திருவாளர் ராஜ கோபாலாச் சாரியார் (ராஜாஜி). க. சந்தா னம் (அய்யங்கார்) வட மொழியில் எழுதிய நாடக நூலான 'உத்தரராம சரிதம்' என்னும் நூலுக்கு ராஜாஜி ஒரு முன்னுரை எழுதி யுள்ளார்.

"நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். ஸ்ரீராமன் உலகிற்கு வழி காட்ட அவதரித்த கடவுள், சீதையை அரும்பாடுபட்டு, இலங்கையிலிருந்து கொண்டு வந்த பின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டு சீதையைக் காட் டுக்கு அனுப்பி விட்டார் என்ற கொடூரச் செயலை என் மனத்திற்குள் சமா தானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை" என்று எழுதியிருக்கிறாரே - இதனை எந்த 'மேனேஜ் மென்ட் பேரேட்டில் பதிவு செய்யப் போகிறது ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்?'

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner