எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஜூலை 22 பாஜக தலைவர்களை உள்ளடக் கிய கேரளா மருத்துவக் கல்லூரி ஊழல் புகார் தொடர்பாக அதிகார பூர்வ விசாரணை தொடங்கப் பட்டது.

புகார்கள் அடிப்படையில் உத்தரவுகள் கொடுத்துள்ளேன், இன்று விசாரணை தொடங்கியது என்று கேரள காவல்துறை உயரதிகாரி லோக்நாத் பெஹ்ரா செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய மருத்துவக் கவுன்சில் மீது செல்வாக்கு செலுத்த தனி யார் நிர்வாக மருத்துவக் கல்லூரி ஒன்று ரூ.5.60 கோடி தொகையை கேரள பாஜக தலைவர்களுக்கு அளித்ததாக புகார்கள் எழுந்தன. அதுமுதலே வடக்கு கேரளாவில் இதே போன்ற இன்னொரு லஞ்சப்புகார் எழுந்தது
வெள்ளியன்று கோழிக் கோடில் சிபிஎம் தலைவர் பிருந் தா காரத் செய்தியாளர்களிடம் கூறும்போது, பாஜக-வை உள்ள டக்கிய ஊழலின் ஒரு முகடுதான் இது.

தூய்மை இந்தியா என்று தேசியத் தலைவர்கள் பேசி வரு கின்றனர், இதனை தங்கள் கட்சியிலிருந்தே அவர்கள் தொடங்கி னால் நல்லது என்றார். கேரள பாஜக தலைவர் கும்மனெம் ராஜசேகரன் இந்தப் புகார்களை மறுத்ததோடு, இதில் தொடர்பிருப்பதாக உட்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, ஊடகத்திற்கு கசிந்த பாஜக கூட்டுறவு பிரிவு ஒருங்கிணைப் பாளர் ஆர்.எஸ்.விநோத் என்ப வரை வியாழன் இரவு பதவி நீக்கம் செய்துள்ளார். புகாரில் புழங்கும் மற்றொரு பெயர் கேரளா பொதுச் செயலர் எம்.டி.ரமேஷ் ஆவார், ஆனால் அவரும் மறுத்ததோடு, தான் குறி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக இன்று நடைபெறவிருந்த மைய கமிட்டி கூட்டத்தை ரத்து செய்து மாறாக மாநில கமிட்டி கூட்டத்தை சனிக்கிழமை கூட்டியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner