எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை, ஜூலை 23 திருவிடைக்கழியில், கோவில் குளத்தை தூர் வாரும் போது, கருங்கல் கடவுளர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.

நாகை மாவட்டம், தரங்கம் பாடி தாலுகா, திருவிடைக் கழியில், சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலின் தீர்த்தக் குளமான, சரவணப் பொய்கையை துர் வாரும் பணி, கடந்த வியா ழனன்று துவங்கியது.

பொக்லைன் இயந்திரம் மூலமாக, நேற்று முன்தினம் தூர் வாரிக் கொண்டிருந்தபோது, 6 அடி உயரமுள்ள முருகர் சிலை, ஒன்றரை அடி உயர முள்ள விநாயகர் மற்றும் அம் பாள் என, மூன்று கடவுளர்கள் கருங்கல் சிலைகள் கண்டெ டுக்கப்பட்டன.

'சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை என, தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த வேண்டும்' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner